மேலும் அறிய

" ஓசியில் பீடி கேட்டு தொல்லை - பீடி தராததால் வடமாநில நபருக்கு நேர்ந்த கொடூரம் "

ஓசி பீடி கேட்டு உருட்டுக் கட்டையால் வட மாநில நபரை தாக்கிய கும்பல் - இறுதியில் நேர்ந்த சோகம்

"ஓசியில் பீடி கேட்டு தொல்லை"

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளி அபிஜித் ( வயது 54 ) இவர், சென்னை நொளம்பூர் கஜலட்சுமி நகர் பகுதியில் தங்கி , அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவன அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் வேலை முடிந்து , அக்குடியிருப்பின் நுழைவு வாயிலில் நின்றபடி அபிஜித் செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்து, வடமாநிலத் தொழிலாளி அபிஜித்திடம் ஓசியில் பீடி கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

"அடித்து கொலை செய்யப்பட்ட வடமாநில நபர்"

அந்த கும்பலுக்கு அபிஜித் ஓசியில் பீடி தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமான 4 பேரும் மது போதையில் வட மாநிலத் தொழிலாளி அபிஜித்தை உருட்டைக் கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரி தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். 4 பேர் கும்பலின் தாக்குதலில் படுகாயங்களுடன் அபிஜித் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

அவரை சக நண்பர்கள் மீட்டு , அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அபிஜித்தை பரிசோதித்த டாக்டர்கள் , அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்ததும் நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மர்ம நபர்களின் தாக்குதலில் இறந்து போன அபிஜித்தின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இப்புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஓசியில் பீடி தராத ஆத்திரத்தில் வடமாநிலத் தொழிலாளியை மதுபோதையில் சரமாரி தாக்கி கொலை செய்த நொளம்பூர், கஜலட்சுமி நகரை சேர்ந்த கோகுல் ( வயது 18 ), வசீகரன் ( வயது 20 ), சபரி ( வயது 19 ), அஜய் ( வயது 18 ) ஆகிய 4 பேரையும் கைது செய்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு: உயர்நீதிமன்றத் தீர்ப்பு பா.ம.க.வின் வெற்றி - அன்புமணி அறிக்கை
பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு: உயர்நீதிமன்றத் தீர்ப்பு பா.ம.க.வின் வெற்றி - அன்புமணி அறிக்கை
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
சென்னையின் எல்லை 5 மடங்கு விரிவாக்கம்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வரப்போகும் மாற்றம்!
சென்னையின் எல்லை 5 மடங்கு விரிவாக்கம்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வரப்போகும் மாற்றம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Mens Day 2026: ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
Embed widget