மேலும் அறிய
Advertisement
"வருங்கால முதல்வர் தளபதி" - ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த விஜய் ரசிகர்கள்
’’விஜய் புகைப்படம் பொறிக்கப்பட்ட வெள்ளை கொடியுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல்’’
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் வேட்புமனுத்தாக்கல்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், வேட்பாளர்கள் போட்டியிட இருக்கிறார்கள். குறிப்பாக அரசியல் கட்சிகள் திரும்பி பார்க்க ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு, வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கே.பி.ஆனந்த் இன்று காலை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, திருப்போரூர் ஒன்றியதிற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கிருபாவதி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்தபோது, தஞ்சை மாவட்ட பொருப்பாளர் இரா.விஜய் சரவணன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி, இளைஞரணி பொறுப்பாளர் M.S.பாலாஜி , திருப்போரூர் ஒன்றிய தலைவர் C.V.தீனா ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல் இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி வார்டுகளில் போட்டியிட நான்கு நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோஷங்கள்
விஜய் புகைப்படம் பொறிக்கப்பட்ட வெள்ளை கொடியுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர் . அப்பொழுது "மக்கள் தளபதி விஜய்" வாழ்க, "தெய்வத் தளபதி", "வருங்கால முதல்வர் " உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வெற்றி வாய்ப்பு
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, செங்கல்பட்டு மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட நபர்கள், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட உள்ளனர். அதேபோல் காஞ்சிபுரத்திலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கு முன் நடந்த தேர்தலில் சில இடங்களில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளனர். தற்போது முதல்முறையாக விஜய் அவர்களின், பெயரை முன்னிறுத்தி போட்டியிட உள்ளதால், பலர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
வரலாறு திரும்புகிறது
நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே விஜயகாந்த் ரசிகர் மன்றங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியநிலையில் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக முதன்முறையாக போட்டியிட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
க்ரைம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion