மேலும் அறிய

கடுமையான மழை: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காதது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் இன்று வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவச் செல்வங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘கொட்டும் மழையில் விடுமுறை அளிக்காமல் பள்ளிக்குழந்தைகளை பரிதவிக்க விடுவதா?முடிவெடுக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும்! சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் இன்று வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவச் செல்வங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனர். மாணவர்களின் துயரத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். டித்வா புயல் காரணமாக சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. இன்று காலை 7 மணியளவில் டித்வா புயல் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அதனால் சென்னையில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. அதனடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை அரசு செய்யாததால் தான் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னைக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்க !! தமிழக, கேரள அரசுகளுக்கு ஐயப்ப சேவா சமாஜம் கோரிக்கை
சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்க !! தமிழக, கேரள அரசுகளுக்கு ஐயப்ப சேவா சமாஜம் கோரிக்கை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget