Air Quality Index : ஊரடங்கால் சென்னையில் காற்றின் தரம் உயர்வு
சமீபத்திய தரவுகளின் படி, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டு காணப்படுகிறது. உதாரணமாக, வேளச்சேரி பகுதியில், காற்றில் NO2 வாயுன் அளவு குறைந்தபட்சமாக 5 முதல் அதிகபட்சமாக 10 மைக்ரோகிராம் அளவு இருந்தது.
கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில், சென்னை பெருநகரில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், 2021, 2019ம் ஆண்டு இருந்த காற்றின் தரத்தை விட 2019ம் ஆண்டு காற்றின் தரம் சிறப்பாக இருந்தது என்பதும் கண்டறியப்பட்டது.
சமீபத்திய தரவுகளின் படி, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டு காணப்படுகிறது. உதாரணமாக, வேளச்சேரி பகுதியில், காற்றில் NO2 வாயுன் அளவு குறைந்தபட்சமாக 5 முதல் அதிகபட்சமாக 10 மைக்ரோகிராம்/கனமீட்டர் அளவு இருந்தது.
காற்று மாசுபட காரணமான வாயுக்களில் ஒன்று நைட்ரஜன் ஆக்ஸைடு. நரம்பு நடத்தையில் பாதிப்பு, இரத்த நாடியில் பாதிப்பு, புற்றுநோய், முதிர்ச்சியற்ற இறப்பு, ஓசோன் மணடலத்தில் பாதிப்பு, காற்று அமில மலை, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு கேடுகளை நைட்ரஜன் ஆக்ஸைடு ஏற்படுத்துகிறது. சாலை போக்குவரத்தானது பாதி நைட்ரஜன் வெளியேற்றத்தில் பங்களிக்கிறது. இதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி 20% நைட்ரஜனை வெளியேற்றுகிறது. தற்போது, பொது போக்குவரத்துக்கு தடை தொடர்வதால் சென்னை காற்றில் நைட்ரஜன் ஆக்ஸைடு அளவு குறைந்துள்ளது.
மேலும், சென்னை காற்றில் கலந்துள்ள PM2.5 மற்றும் PM10 நுண்துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தர அளவை விட குறைவாகவே உள்ளது.
கடந்தாண்டு லாக்டவுன்:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்தண்டு மார்ச் 24-ம் தேதியன்று தேசிய பொது முடக்கநிலை அமல்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளிகள், கல்லுரிகள் இயங்க தடை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, (செப்டம்பர் 1ம் தேதி முதல்) தமிழகத்தில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
2021 மார்ச மாதம் நடுப்பகுதியில் கொரோன இரண்டாவது அலையின் பாதிப்புகள் தொடங்கின. 2021 ஏப்ரல் 20 அன்று தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. மே 10ம் தேதியில் இருந்து இரண்டு வாரகால முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டன.
ஆனால், பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ள மளிகைக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கிடையே, மே மாதம் 24 - 31-ந் தேதிவரை ஒரு வார கால தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. காய்கறி, மளிகைக் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
2020ம் ஊரடங்கும்.,சென்னை காற்றும்:
சென்னையில் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, 2019ம் ஆண்டு 25 மார்ச் முதல் மே 3 வரை இருந்த காற்றின் தரத்தை விட 2020ம் ஆண்டு காற்றின் தரம் சிறப்பாக உள்ளது என கண்டறியப்பட்டது . ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 நாட்களில், காற்றின் தரம் நன்றாக இருந்த நாட்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு 26 ஆக உள்ளது; இது 2019ம் ஆண்டில் 4 ஆக மட்டும் இருந்தது. இதே போல் 2019ம் ஆண்டில் 4 நாட்கள் காற்றின் தரம் நடுத்தரமாக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் பூஜ்ஜியமாக இருந்தது.