மேலும் அறிய

வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ! போக்சோ தீர்ப்பு

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் , 47 வயது நபருக்கு , ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சைதாப்பேட்டையில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : 5 ஆண்டு சிறை ! போக்சோ தீர்ப்பு பரபரப்பு

சென்னை சைதாப் பேட்டை அருகே 7 வயது சிறுமி , 2021ல் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் வெங்கடேசன் ( வயது 47 ) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், சைதாப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் ஜாமினில் வெளியே வந்தார். இவ்வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி எஸ். பத்மா விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி , வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக்கூறி , அவருக்கு ஐந்து ஆண்டு கடுங் காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

டிரேடிங் நிறுவனம் நடத்தி 1.73 கோடி ரூபாய் சுருட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஏஜன்ட் கைது

சென்னை வில்லிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 45 ) தனியார் நிறுவன ஊழியர். தொழில் தொடர்பாக திரு முல்லைவாயல் கே.கே. நகரைச் சேர்ந்த சண்முகம் ( வயது 57 ) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

அண்ணாநகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனத்தில் ஏஜென்டாக பணிபுரிந்த சண்முகம் தங்கள் நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் , 10 மாதத்தில் இரட்டிப்பாக்கி தரப்படும் என வெங்கடேசனிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதை நம்பிய வெங்கடேசன் 2022 - ம் ஆண்டு முதல் 2023 - ம் ஆண்டு வரை, 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். இதே போன்று 35 - க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து 1.73 கோடி ரூபாய் வசூல் செய்து நிறுவனத்தில் செலுத்தி கமிஷன் பெற்றுள்ளார்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் உட்பட 36 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் கடந்த ஜூலை 10 ம் தேதி, நிறுவனத்தின் உரிமையாளரான முனவர் உசேனை கைது செய்தனர். தலைமறைவான ஏஜன்ட் சண்முகம் , திருமுல்லைவாயலில் இருப்பதை அறிந்து  அங்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget