மேலும் அறிய
Advertisement
திருவாரூர் கமலாலயக் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும் இது மிகவும் ஆபத்தான குளம் இதுபோன்று விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியும் அதையும் மீறி சிறுவர்கள் குளத்தில் குளித்துள்ளனர்
திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள உள்ள புலிவலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் 14 வயதுடைய சக்திவேல். இவர் முடி வெட்டி விட்டு தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் குளித்துள்ளார். இந்த நிலையில் சிறுவர்கள் மூவரும் சுமார் இரண்டு மணி நேரமாக நேரமாக குளத்தில் குதித்து விளையாடியபடி குளித்துள்ளனர். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும் இது மிகவும் ஆபத்தான குளம் இதுபோன்று விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியும் அதையும் மீறி சிறுவர்கள் குளத்தில் விளையாடியபடி குளித்துள்ளனர். இந்த நிலையில் சக்திவேல் என்கிற சிறுவன் மட்டும் நீரில் மூழ்கி உள்ளான். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சக்திவேலை அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டு முதலுதவி அளித்தனர்.
அதனையடுத்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் தாமதிக்காமல் அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் சக்திவேலை ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த திருவாரூர் நகர காவல் துறையினர் சிறுவன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நகர காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளம் என்பது மிகவும் ஆழமானது. மேலும் இந்த குளத்தின் அடியில் 64 தீர்த்தக் கிணறுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த குளத்தில் துணி துவைக்கவோ குளிக்கவோ அனுமதி இல்லை என்று நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகைகள் குளத்தை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில் லாமல் முக்கிய அமாவாசை தினங்களில் திதி கொடுப்பது போன்ற நிகழ்வுகள் இந்தக் குளக்கரையில் நடப்பதால் இரும்பு கம்பிகள் படித்துறையில் பதிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. ஆனால் அதனையும் மீறி பலர் இந்தக் குளத்தில் குளித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக சிறுவர்கள் வயதானவர்கள் இந்தக் குளத்தில் இறங்கவே கூடாது என்று ஊராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தும்,அதனை மீறி சிறுவர்கள் குளத்தில் குளித்து வருகின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகள் இனிமேலும் ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள வேண்டுமென திருவாரூர் நகர மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion