மேலும் அறிய

Tughlaq Darbar | `துக்ளக் தர்பார்’ - விஜய் சேதுபதிக்கு வில்லன் விஜய் சேதுபதிதான்!

அரசியல் என்பதே வியாபாரம் என்று மாறியிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் தனக்குத் தெரியாமலேயே நல்லவனாக மாற முயலும் சுயநல அரசியல்வாதி ஒருவனின் வித்தியாசமான கதையாக உருவாகியிருக்கிறது ‘துக்ளக் தர்பார்.’

அரசியல் என்பதே வியாபாரம் என்று மாறியிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் தனக்குத் தெரியாமலேயே நல்லவனாக மாற முயலும் சுயநல அரசியல்வாதி ஒருவனின் வித்தியாசமான கதையாக உருவாகியிருக்கிறது ‘துக்ளக் தர்பார்.’ தமிழக அரசியலின் காமெடியான பக்கங்களைத் தொட்டாலும், அரசியல் படமாக அல்லாமல், அரசியல்வாதிகளைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது.

தென்சென்னை ஹவுசிங் போர்டு பகுதியில் பிறக்கும் சிங்காரவேலன் (விஜய் சேதுபதி), அவனின் தங்கை மணிமேகலை (மஞ்சிமா மோகன்) ஆகிய இருவரும் அப்பகுதி மக்களால் வளர்க்கப்படுகிறார்கள். சிங்கம் என்று அழைக்கப்படும் சிங்காரவேலன் சிறுவயது முதலே, ராயப்பன் (பார்த்திபன்) என்ற அப்பகுதி அரசியல்வாதியின் மீது பெருமதிப்பு கொண்டு வளர்கிறான். ராயப்பனைப் போல அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என நினைக்கும் சிங்காரவேலன் மீது பொறாமை கொள்கிறான் ராயப்பனின் வலது கையாக இருக்கும் மங்களம் (பகவதி பெருமாள்). இந்தப் பொறாமையால் சிங்காரவேலனை மங்களம் தாக்கிய பிறகு, கட்சியில் இருந்து நீக்கப்பட, சிங்காரவேலனுக்குக் கவுன்சிலர் பதவிக்கான வாய்ப்பு கிடைக்கிறது. எனினும், மங்களத்தின் தாக்குதலால் சிங்காரவேலனுக்குப் புதிய பிரச்னைகள் உருவாகின்றன. அவை சிங்காரவேலனின் அரசியல் பயணத்திற்கு இடையூறாக மாற, அவனுக்கும் ராயப்பனுக்கும் இடையிலான உறவு என்னவானது, சிங்காரவேலனின் அரசியல் கனவு பலித்ததா எனத் தொடர்ந்து பேசுகிறது `துக்ளக் தர்பார்’.

Tughlaq Darbar | `துக்ளக் தர்பார்’ - விஜய் சேதுபதிக்கு வில்லன் விஜய் சேதுபதிதான்!

சிங்கம் என்கிற சிங்காரவேலனாக விஜய் சேதுபதி. வழக்கம்போல், விஜய் சேதுபதி விஜய் சேதுபதியாகவே வருகிறார். உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்ணைச் சிமிட்டிய படி காட்ட முயன்று கொண்டிருக்கிறார். உடல்மொழியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. தொடக்க காலங்களில் நாம் பார்த்த விண்டேஜ் விஜய் சேதுபதியைக் காணவில்லை என்று விரைவில் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்க வேண்டிய அளவுக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றன அவரது சமீபத்திய படங்கள். அவற்றுள் இதுவும் விதிவிலக்கு அல்ல. 50 கோடி ரூபாய் பணத்தைத் தொலைத்துவிட்டு, கண்ணீருடன் கண்ணாடியைப் பார்த்துக் கெஞ்சும் காட்சியில் மட்டும் எட்டிப் பார்க்கிறார் விண்டேஜ் விஜய் சேதுபதி. 

`நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு, ஒன்றாக நடித்திருக்கிறது விஜய் சேதுபதி - பார்த்திபன் காம்போ. தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான ரவுடி அரசியல்வாதி வில்லன் வேடம் பார்த்திபனுக்கு. எந்த மாற்றமும் இல்லாத வழக்கமான நடிப்பு. மணிமேகலையாக வரும் மஞ்சிமா சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், கதையோட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை. கதாநாயகி ராஷி கண்ணாவுக்கு விஜய் சேதுபதிக்குத் தேவைப்படும் நேரத்தில் பணம் வழங்குவது, தேவைப்படும் நேரத்தில் ஜாமீன் எடுப்பது, ஒரு தலையாக காதல் செய்வது, பாடல் காட்சிகளின் மாண்டேஜ்களில் அழகாக புன்னகைப்பது ஆகியவை மட்டுமே பணியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

Tughlaq Darbar | `துக்ளக் தர்பார்’ - விஜய் சேதுபதிக்கு வில்லன் விஜய் சேதுபதிதான்!

அரசியல்வாதிகளை வைத்து காமெடி செய்வதாக நினைத்து, சிரிப்பை வரவழைக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் டெல்லிபிரசாத் தீனதயாளன். ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள் டெல்லிபிரசாத்? அதைத் தான் தினமும் அரசியல்வாதிகளே செய்கிறார்களே! தலைவனாக வளர நினைக்கும் தொண்டன் என்ற ஒன்லைனும், விஜய் சேதுபதி - பார்த்திபன் உறவில் தெரியும் ‘அமைதிப்படை’ சாயலையும் பார்வையாளர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தெரிந்தே கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார்கள். ஆனால் கிளைமேக்ஸ் காட்சி வரை, பார்வையாளர்கள் தாங்குவார்களா என்பதே திரைக்கதை நமக்குத் தரும் சர்ப்ரைஸ். 

ஏற்கனவே நாம் பார்த்த பல படங்களை நினைவுபடுத்துகிறது `துக்ளக் தர்பார்’. கொஞ்சம் `அமைதிப்படை’, கொஞ்சம் `அந்நியன்’, கொஞ்சம் `கொடி’, கொஞ்சம் `NGK', இறுதியில் ‘சர்க்கார்’ ஒரு விரல் புரட்சியே பாணியில் ஒரு பாடல் எனக் கலந்துகட்டி ரோலர் கோஸ்டர் ரைடில் ஏற்றி, சுற்றிவிட்டு கீழே இறக்குகிறது `துக்ளக் தர்பார்’. இதில் ‘பீட்சா’, ‘அமைதிப்படை’ ஆகிய ரெபரன்ஸ்களை நமக்கு கதாபாத்திரங்களே சொல்லிவிடுகின்றன. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைப் போல, தலையில் ஒரு அடி விழுந்த பின், வேறொரு ட்ராக்கிற்குக் கதையைக் கொண்டு செல்கிறது. எந்த லாஜிக்கும் தேவைப்படாத, மிகவும் சோம்பலான கதாபாத்திர வடிவமைப்பாக இது இருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதிய பாலாஜி தரணிதரன் தான் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி - கருணாகரன் காம்போ நமக்கு `சூது கவ்வும்’ படத்தை நினைவூட்ட, கிளைமேக்ஸ் காட்சியும் அதே படத்தைத்தான் நினைவூட்டுகிறது.

Tughlaq Darbar | `துக்ளக் தர்பார்’ - விஜய் சேதுபதிக்கு வில்லன் விஜய் சேதுபதிதான்!

மனோஜ் பரமஹம்சா, மகேந்திரன் ஜெயராஜு என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் என்ற போதும், இந்தப் படத்தின் ஒளிப்பதிவு சராசரியாகவே இருக்கிறது. பாடல்களின் மாண்டேஜ்களில் காட்டிய வேகத்தைப் படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் முழு படத்திலும் காட்டியிருக்கலாம். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை ஆங்காங்கே நமக்கு கேட்கிறது. அவரது இசையில் வரும் பாடல்கள் புத்துணர்வை ஊட்டினாலும், படத்தின் போக்கில் சோர்வை அளிக்கின்றன. `என்.ஜி.கே’ படத்தின் ‘தண்டல்காரன்’ பாடலும், இதில் வரும் `அரசியல் கேடி’ பாடலும் ஒரே போன்ற காட்சியமைப்பைக் கொண்டிருக்கின்றன. 

அரசியல் பேசுவதா, காமெடி பண்ணுவதா, இல்லை மெசெஜ் சொல்வதா என்ற வட்டத்திற்குள் நின்று குழப்புகிறது `துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதிக்கு முளைக்கும் பிரச்னை வேறு பார்ப்பவர்களைப் படுத்தி எடுக்கிறது. எது எப்படியோ, விஜய் சேதுபதிக்கு வில்லன் விஜய் சேதுபதிதான் என்பதை மட்டும் தெளிவாக உணர்த்தியிருக்கிறது `துக்ளக் தர்பார்’.

`துக்ளக் தர்பார்’ படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget