மேலும் அறிய

Curry & Cyanide: The Jolly Joseph Case: கேரளாவை உலுக்கிய சயனைடு கொலை வழக்கு - நெட்பிளிக்ஸை அலற விடும் ஆவணப்படம்..!

Curry & Cyanide: The Jolly Joseph Case: ஒருவேளை சிலருக்கு இந்த வழக்கு என்னவென்று தெரிந்திருக்கலாம். ஆனால் என்ன வழக்கு என தெரியாமல் பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு சர்ப்ரைஸ் தான்.

கேரளாவை உலுக்கிய கூடத்தாய் சயனைடு கொலை வழக்கானது Curry & Cyanide: The Jolly Joseph Case என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த ஆவணப்படம் பற்றிய தொகுப்பை காணலாம். 

வழக்கின் பின்னணி 

 கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கூடத்தாய் கிராமத்தில் டாம் தாமஸ், அவரது மனைவி அன்னம்மா, மகள் ரெஞ்சி வில்சன், மூத்த மகன் ராய் தாமஸ், இளைய மகன் ரோஜோ தாமஸ் ஆகியோர் வாழ்ந்து வந்தனர். இதில் ராய் தாமஸ், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்மணியான ஜாலி ஜோசஃப் என்பவரை காதலித்து 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்கிறார். 

தான் ஒரு எம்.காம் பட்டதாரி என சொல்லி மெத்த படித்த, ஓய்வு பெற்ற ஆசியர்களான டாம் தாமஸ் - அன்னம்மா குடும்பத்தில் மருமகளாக வருகிறார். நன்கு படித்துவிட்டு சும்மா இருக்க வேண்டாம் என அன்னம்மா ஜாலி ஜோசஃப்பை தொடர்ந்து வலியுறுத்துகிறார். இதற்கிடையில் ஜாலி ஜோசஃப்புக்கு குழந்தை பிறக்கிறது. ஆனால் அன்னம்மா தொடர்ந்து வேலைக்கு செல்லுமாறு வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு அன்னம்மாவும், 2008 ஆம் ஆண்டு டாம் தாமஸூம், 2011 ஆம் ஆண்டு ராய் தாமஸூம், 2014 ஆம் ஆண்டு ராயின் தாய் மாமா மேத்யூ மஞ்சாடியில், உறவுக்கார பெண்மணி சிலியின் குழந்தை அல்ஃபின், 2016 ஆம் ஆண்டு சிலி ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். இவர்கள் சயனைடு கலந்து கொள்ளப்பட்டதாக ராய் தாமஸ் சகோதரி ரெஞ்சி வில்சன், சகோதரன் ரோஜோ தாமஸ் இருவரும் காவல்துறைக்கு செல்கின்றனர். இந்த வழக்கு தொடர்பான புகார் கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பின் தான் அளிக்கப்படுகிறது. இன்றளவு ஜாலி ஜோசஃப் வழக்கு நடந்து வருகிறது.  

ஆவணப்படமாக சரியா? 

ஒருவேளை சிலருக்கு இந்த வழக்கு என்னவென்று தெரிந்திருக்கலாம். ஆனால் என்ன வழக்கு என தெரியாமல் பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு சர்ப்ரைஸ் தான். கிட்டதட்ட 1 மணி நேரம் 37 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் ராய் தாமஸின் சகோதரி ரெஞ்சி, ஜாலி ஜோசப் மூத்த மகன் ரெமோ, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, ஜாலி ஜோசப் தரப்பு வழக்கறிஞர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என பலரின் பார்வையில் காட்சிகளாக விவரிக்கப்படுகிறது. எங்கேயும் சலிக்காமல் நகர்த்தப்படும் இந்த Curry & Cyanide: The Jolly Joseph Case அனைவரும் காணக் கூடிய ஒன்று தான். 

ஆனால் போலி கல்விச் சான்றிதழ் உருவாக்கியது, கல்லூரி வேலை, தடயமே தெரியாமல் கொலை, அதில்  செய்த தவறு, வெளிப்படையாக சிக்கியும் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித சந்தேகமும் இல்லாமல் இருந்தது என ஜாலி ஜோசஃப் கேரக்டர் நம் அனைவருக்குமே ஒரு பெண்மணியாக ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறார். 

அதேசமயம் உண்மையில் கொலைக்கான காரணங்கள் அதிகார ஆசையா? பணத்தின் மேலான பற்றா?  என எந்த கேள்விகளுக்கும் நம்மிடம் விடையில்லை. காரணம் தடையமே இல்லாமல் சம்பவம் செய்யும் ஜாலி ஜோசஃப் செய்த குற்றங்களான காரணங்கள் பெரிய அளவில் இல்லை. சொல்லப்போனால் அனைத்து கொலைகளுக்கும் ஒரே காரணம் இல்லை அதுதான் இந்த வழக்கில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தோண்ட தோண்ட வழக்கு வேறு வேறு பக்கமாக செல்வது காண்பவர்கள் நமக்கே ஒருவித அதிர்ச்சியை  உண்டாக்குகிறது. ‘எவ்வளவு பாவங்கள் செய்தாலும் ஆண்டவர் மன்னிப்பதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே. அதுபோல நானும் மன்னிக்கப்படுவேன்” என ஜாலி சொன்னதாக கூறப்படும் சம்பவம் கொலைகள் செய்ததற்கு அவர் வருத்தமே படவில்லை என்பதை காட்டுகிறது. 

இந்த 6 பேர் கொலை வழக்கில் 2019 ஆம்  ஆண்டு தான் ஜாலி ஜோசஃப் கைது செய்யப்படுகிறார். தொடர்ந்து இவ்வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் செய்திகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆவணப்படத்தை குறைகள் இருந்தாலும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோ டாமி. நிச்சயம் ஒருமுறையாவது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படத்தை காணுங்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
Breaking News LIVE: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்
Breaking News LIVE: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்
Virat Kohli: டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!
டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
Breaking News LIVE: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்
Breaking News LIVE: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்
Virat Kohli: டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!
டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!
Arshdeep Singh: சிங்குனா கிங்குடா..! விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய அர்ஷ்தீப் சிங் - யார்க்கரில் விக்கெட்டுகளை பதம் பார்த்து மிரட்டல்
Arshdeep Singh: சிங்குனா கிங்குடா..! விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய அர்ஷ்தீப் சிங் - யார்க்கரில் விக்கெட்டுகளை பதம் பார்த்து மிரட்டல்
Rahul Dravid: ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..!  ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..! ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Thangalaan: ரிலீஸ் தேதியை உறுதி செய்த தங்கலான் டீம்.. எப்போ தெரியுமா?
Thangalaan: ரிலீஸ் தேதியை உறுதி செய்த தங்கலான் டீம்.. எப்போ தெரியுமா?
Embed widget