மேலும் அறிய
Advertisement
Dark Circle Remedies | கண்களை சுத்தி சுரப்பா, கருவளையமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ் இவைதான்
முகத்தில் கருவளையம் வர பல்வேறு காரணங்கள் இருக்கும். போதுமான தூக்கமின்மை, மனஅழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், வேலைப்பளு, போன்ற காரணங்களால் வருகிறது.
முகத்தில் கருவளையம் வர பல்வேறு காரணங்கள் இருக்கும். போதுமான தூக்கமின்மை, மனஅழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், வேலைப்பளு, போன்ற காரணங்களால் வருகிறது. இந்த கருவளையம் நீங்க, பிரபல ஊட்டச்சத்து நிபுணர், ருஜுதா திவேகர் சில டிப்ஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
- வீட்டில் தயாரித்த இஞ்சி மற்றும் துளசி டீ - இஞ்சி, துளசி, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து டீ தயாரித்து , தேவையான அளவு தேன் கலந்து குடிக்கலாம்.
- மாலை ஸ்னாக்ஸ் ஆரோக்கியமாக எடுத்து கொள்ளவும். வேகவைத்த வேர்க்கடலை , வெல்லம் மற்றும் அதனுடன் சிறிதளவு தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எண்ணையில் பொறித்த வறுத்த சிப்ஸ் போன்றவற்றை தவிர்த்து இது போன்ற ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
- பயித்தம் மாவு மற்றும் பால் கலந்து முகத்திற்கு பேஷ் மாஸ்க் போடலாம்.இதை வீட்டில் செய்து தினம் போடலாம். முகத்தில் இருக்கும் கழிவுகள் நீங்கி புத்துணர்வுடன் இருக்கும்.
- மதியம் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்க வேண்டும். இரவு 11 மணிக்கு முன் தூங்கச்செல்ல வேண்டும். ஆழந்த உறக்கம் அவசியம்.
- எதிர்மறை சிந்தனை இருப்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள். இது உடல்நலம் மற்றும் மனநலத்திற்கு நல்லது.
View this post on Instagram
இது போன்ற விஷயங்களை பின்பற்றுங்கள். கருவளையத்தில் இருந்து விடுதலை பெறுங்கள். கருவளையம் நீங்கி புத்துணர்வுடன் இருங்கள்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion