மேலும் அறிய

Summer Tips: கோடைக்கால சமையலில் இதுக்கெல்லாம் கண்டிப்பா நோ சொல்லுங்க.. இதோ லிஸ்ட்

கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய மசாலா பொருட்கள் மற்றும் உணவில் சேர்க்க வேண்டியவைகள் பற்றி கீழே காண்போம்.

கொளுத்தும் கோடை வெப்பம் நம் செரிமான மண்டலத்தின் செயல்திறனை குறைக்கும். செரிமான மண்டலம் மாறுதல்களுக்கு உள்ளாகும். கோடைக்காலத்தில் உடலின் வெப்பநிலை சமமாக இருக்க வேண்டியது அவசியம். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு ஐஸ் கிரீம், மோர் உள்ளிட்டவைகளெல்லாம் போதாது. உங்கள் உணவுவிலும் பருவ காலத்திற்கு ஏற்றதுபோல் இருக்க வேண்டும். உடலை குளிர்விக்க இயற்கையான வழிகளை கையாள வேண்டும். அதற்கு உங்கள் டயட் கன்ட்ரோல் மிகவும் முக்கியம். கோடைக்காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். சிக்கன், மீன் உள்ளிட்டவைகளை எண்னெய் பொரித்து உண்ணாமல் வேகவைத்து சாப்பிடலாம். 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மசாலாப் பொருட்களும் கோடைகாலத்திற்கு ஏற்றவை அல்ல. உதாரணமாக, சிவப்பு மிளகாய் தூள் கோடையில் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் மற்றும் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். கோடையில் உணவில் சில மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது உங்கள் செரிமான அமைப்பு மற்றும் உடல் வெப்பநிலையில் மாற்றங்களைச் செய்யும். 

கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய மசாலா பொருட்கள் மற்றும் உணவில் சேர்க்க வேண்டியவைகள் பற்றி கீழே காண்போம்.

கொத்தமல்லி வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும், பெருஞ்சீரகம் விதைகள் நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. புதினா உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது, அதே நேரத்தில் சீரக விதைகள் வீக்கம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்.

இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

Summer Tips: கோடைக்கால சமையலில் இதுக்கெல்லாம் கண்டிப்பா நோ சொல்லுங்க.. இதோ லிஸ்ட்

கொத்தமல்லி:

இது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவுகிறது. இதனால், உடலின் வெப்பநிலை குறையும்.  புத்துணர்ச்சியும் இருக்க உதவுகிறது. இதனால் செரிமான மண்டலம் ஹேப்பியாக வேலை செய்யும்.

  • ஒரு டீஸ்பூன்  தனியாவை எந்த உணவு சமைத்தாலும் சேர்க்கலாம்.
  • கொத்தமல்லி இலைகளை வெள்ளரி மற்றும் தக்காளியுடன் சேர்த்து சால்ட்  தயாரிக்க பயன்படுத்தலாம்.
  • கொத்தமல்லி சட்னி அடிக்கடி சாப்பிடலாம்.

பெருஞ்சீரகம்: 

 இதில் உள்ள வைட்டமின் சி செரிமானத்தை தூண்டுகிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.

Summer Tips: கோடைக்கால சமையலில் இதுக்கெல்லாம் கண்டிப்பா நோ சொல்லுங்க.. இதோ லிஸ்ட்

  • சமைக்கும் உளவுகளில் சிறிது பெருஞ்சீரம் தாளிக்கலாம்.
  • பெருஞ்சீரக டீ நல்ல சாய்ஸ்.
  • சாலட் உணவுகள் சாப்பிடும்போது பெருஞ்சீரத்தை பொடித்து அதில் தூவி சாப்பிடலாம்.
    Summer Tips: கோடைக்கால சமையலில் இதுக்கெல்லாம் கண்டிப்பா நோ சொல்லுங்க.. இதோ லிஸ்ட்

சீரகம்:

சீர்+ அகம்- சீரகம் -

உடலின் உட்புறத்தை சீராக்குகிறது என்று பொருள்.  இந்திய சமையலில் இது மிக முக்கியமானது. இதன் நறுமணம், சுவை ஆகியவற்றை விடவும், இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது. கோடைக்காலத்திற்கு ஏற்ற மசாலா.

  • சமையில் தினமும் சீரகம் சேர்க்கலாம்.
  • மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றுடன் சீரகத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.

  • Summer Tips: கோடைக்கால சமையலில் இதுக்கெல்லாம் கண்டிப்பா நோ சொல்லுங்க.. இதோ லிஸ்ட்

புதினா:

புதினா ஒரு சிறந்த மூலிகை. இது அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அமிலத்தன்மை மற்றும் இரைப்பை அழற்சி தொடர்பான நெஞ்செரிச்சல் உள்ளிட்டவைகளை போக்கும். கோடை வெயிலிலும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

  •  டீயில்  புதினா சேர்க்கலாம்.
  • புதினா சட்னி சாப்பிடலாம்.
  • லெமன் புதினா ஜூஸ் குடிக்கலாம்.

கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டியவைகள்:

Summer Tips: கோடைக்கால சமையலில் இதுக்கெல்லாம் கண்டிப்பா நோ சொல்லுங்க.. இதோ லிஸ்ட்

சிவப்பு மிளகாய் தூள்:

இதை அதிகப்படியான அளவு எடுத்துக் கொண்டால், வயிறு, தொண்டையில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இது உடல் வெப்பநிலையையும் அதிகரிக்கும். முடிந்தவரையில் காரம் குறைவாக சாப்பிடுவது நல்லது.

பூண்டு:

உடல் எடையை குறைப்பது,  பசியைக் கட்டுப்படுத்துவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இருந்து பல நன்மைகள் இதில் உள்ளன. இருப்பினும், குளிர்காலத்தில் இதை அதிகமாக உட்கொள்வது நல்லது, கோடையில் இது உடலின் வெப்பநிலையை உயர்த்தும். ஆகையால், பூண்டை உணவில் குறைவான அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இஞ்சி:

இஞ்சியில், செரிமானத் திறன் உள்ளிட்ட பல நன்மைகள் இருந்தாலும், கோடையில் இதை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அதிக அளவில் எடுத்துக் கொண்டால், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைகளையும் இது ஏற்படுத்தும். அதனால்,அதிக அளவு இஞ்சி சாப்பிடுவதை தவிக்கவும். 

கோடைக்கு ஏற்றவாறு காரம் மற்றும் மசாலா குறைவாக இருக்கும் உணவை சாப்பிட்டு ஆரோக்கியாக இருங்கள்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்

வீடியோ

புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Embed widget