மேலும் அறிய

சைக்கிளில் வரும் ரெங்கன் வாத்தியார் மட்டுமல்ல சீர்காழி அல்வாவும் இங்கே பேமஸ்!

Sirkazhi Cycle Halwa: பாரம்பரிய தனித்துவமான சீர்காழி சைக்கிள் அல்வாவின் சுவை, அனைவரையும் ஈர்த்து வருகிறது.

சீர்காழியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமிக்க சைக்கிளில் அல்வா. இதற்கென்று ஒரு ரசிகர் பட்டாளம். அல்வா என்கிற சொல்லை கேட்டாலே சிறியவர் முதல் பெரியவர் வரை நாக்கில் எச்சில் ஊறும். அப்படிப்பட்ட அல்வாவிற்கு என்று ஒரு சில உதாரணங்கள் உண்டு, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, திருவையாறு அசோகா அல்வா போன்று சீர்காழியில் பிரபலமானது சைக்கிள் அல்வா.

சைக்கிளில் வரும் ரெங்கன் வாத்தியார் மட்டுமல்ல சீர்காழி அல்வாவும் இங்கே பேமஸ்!

ஆமாங்க மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செட்டித்தெருவில் வசித்துவந்த சுந்தரம் என்பவர் 1966- ஆம் ஆண்டு முதல் தனது வீட்டிலேயே சம்பா கோதுமையை அரைத்து அதில் பால் எடுத்து தன் கைபக்குவத்தில் அல்வா தயார் செய்து, அதனை தட்டில் வைத்து, கடைவீதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்.  இந்த பாரம்பரியம் அல்வா இன்று 55 ஆண்டுகள் கடந்து தற்போதும் தொடர்ந்து அதே சுவையுடன் சீர்காழி மற்றும் இன்றி பல்வேறு நாடுகள் வரை வரவேற்பைப் பெற்று விற்பனை ஆகி வருகிறது. 

சைக்கிளில் வரும் ரெங்கன் வாத்தியார் மட்டுமல்ல சீர்காழி அல்வாவும் இங்கே பேமஸ்!

சீர்காழி அல்வா சுந்தரத்தின் மறைவிற்கு பின்னர் அவரது மகன்கள் நான்கு பேரும் தனித் தனியாக தங்களது வீடுகளிலேயே தன் தந்தையிடம் கற்றுக் கொண்ட அல்வா பக்குவத்தை சிறிதும் மாறாமல் அல்வா தயார் செய்து சைக்கிளில் எடுத்துச் சென்று சீர்காழி நகர் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இரண்டு சகோதரர்கள் இந்த அல்வா விற்பனையை கைவிட்ட நிலையில் தற்போது மற்ற இரு சகோதரர்களான கணேசன் மற்றும் ரவி ஆகிய இருவர்  மட்டும்  அல்வா வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

சைக்கிளில் வரும் ரெங்கன் வாத்தியார் மட்டுமல்ல சீர்காழி அல்வாவும் இங்கே பேமஸ்!

இந்த அல்வா திருநெல்வேலி அல்வா போன்று சுவை, நல்ல தரத்துடன் இருப்பதால், மக்களிடையே பிரபலமானது. சீர்காழி மக்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது இந்த சம்பா கோதுமை அல்வாவை வாங்கிச் செல்வதுடன், வேலை நிமித்தமாக  சிங்கப்பூர், சவூதி, துபை போன்ற வெளிநாடுகளில் பணிபுரியும் தங்கள் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் வாங்கி கொடுத்து அனுப்புகின்றனர்.

சைக்கிளில் வரும் ரெங்கன் வாத்தியார் மட்டுமல்ல சீர்காழி அல்வாவும் இங்கே பேமஸ்!

ஒரு மாதம்  ஆனாலும் இந்த சம்பா கோதுமை அல்வா கெடாமல் உள்ளது. இந்த நவீன காலத்திலும் இந்த அல்வா வியாபாரிகள் சைக்கிளில் சென்றுதான் வியாபாரம் செய்கின்றனர். இதனாலேயே இது சைக்கிள் அல்வா என பெயர் பெற்று மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தினந்தோறும் இந்த சைக்கிள் அல்வா வருகை நோக்கி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆகையால் ஒரு சில மணித்துளிகளில் இந்த அல்வா விற்றுத் தீர்ந்துவிடும்.

சைக்கிளில் வரும் ரெங்கன் வாத்தியார் மட்டுமல்ல சீர்காழி அல்வாவும் இங்கே பேமஸ்!

இதுகுறித்து, அல்வா வியாபாரம் செய்துவரும் ரவி கூறுகையில், ‛‛ 25  ஆண்டுகளுக்கு மேலாக அல்வா வியாபாரம் செய்து வருவதாகவும் பாரம்பரிய முறையில் தனது தந்தையின் பக்குவத்தை  முறையாக பின்பற்றி, விறகு அடுப்பை பயன்படுத்தி அல்வா தயார் செய்வதாகவும்,  முதல் நாள் சம்பா கோதுமையை தண்ணீரில் ஊறவைத்து,  மறுநாள் காலை அந்த கோதுமையை நன்கு அரைத்து அதிலிருந்து பால் எடுத்து பின்னர், மூன்றாம் நாள் அந்த பாலை தெளியவைத்து அல்வா கிண்டுவோம் என்றும், பின்னர் தயார் செய்த அல்வாவை சைக்கிளில் எடுத்துச்சென்று நகர் முழுவதும் தெரு, தெருவாக சென்று வியாபாரம் செய்து வருவதாகவும், தனது தந்தையின் காலத்தில் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உறவினர்கள் தொடர்ந்து கோபாலபுரம் செல்லும்போதெல்லாம் அவருக்காக தனது தந்தையிடம் அல்வா வாங்கி செல்வார்கள்,’’ என்றும் தெரிவித்தார். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Alliance CPM : 6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
DMK VCK Alliance : 10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance CPM : 6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
DMK VCK Alliance : 10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
Duster 2026 Competitors: டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
Maruti Fronx Flex: டெக்னாலஜில இந்த கார அடிச்சுக்க முடியாது; ஃபிராங்க்ஸில் ஃபிளெக்ஸ் தொழில்நுட்பம்; அசத்தும் மாருதி
டெக்னாலஜில இந்த கார அடிச்சுக்க முடியாது; ஃபிராங்க்ஸில் ஃபிளெக்ஸ் தொழில்நுட்பம்; அசத்தும் மாருதி
CV Shanmugam Vs Nayanthara : நயன்தாரா விவகாரம்.! திடீர் பல்டி அடித்த சி.வி. சண்முகம்- என்ன சொல்லியிருக்காரு தெரியுமா.?
நயன்தாரா விவகாரம்.! திடீர் பல்டி அடித்த சி.வி. சண்முகம்- என்ன சொல்லியிருக்காரு தெரியுமா.?
Nissan Magnite Offers: ஆஃபரை அள்ளி வழங்கிய நிசான்; மேக்னைட் காரில் மெகா தள்ளுபடி.? இவ்வளவு லட்சமா.?!
ஆஃபரை அள்ளி வழங்கிய நிசான்; மேக்னைட் காரில் மெகா தள்ளுபடி.? இவ்வளவு லட்சமா.?!
Embed widget