மேலும் அறிய

Ayurveda Tips: மழைக்காலங்களில் நோய் எதிர்ப்புத்திறன் மேம்பட ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் வழிமுறைகள்!

Ayurveda Tips: மழைகாலத்தில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவும் சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மழை காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம். உணவு முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அடிக்கடி சளி, இருமல் பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

மழை காலத்தில் தொற்று நோய்கள் எளிதாக பரவ கூடியது. வீட்டைவிட்டு வெளியே சென்று வந்தால் கை, கால் சோப்பு போட்டு சுத்தம் செய்வது நல்லது. 

சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றிற்கு உணவு முறையில் சில மாற்றங்களை செய்வது உதவலாம். நோய் தொற்று பாதிப்பு தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமானது. ஆனால், சளி இருமல் போன்றவற்றிற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அவற்றை குணப்படுத்த முடியும். இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கையில்,” பொதுவாக சளி பிடித்திருந்தால் அதற்கு மருந்துகள் சாப்பிடுவது அதை வெளியே வரவிடாமல் செய்துவிடும். அதற்கு பதிலாக இயற்கை முறையில் அதை குணப்படுத்த சாப்பிடுவது நல்லது.” என்று விளக்கம் அளிக்கிறார்.

இயற்கையான முறையில் சளியை குணப்படுத்த சில டிப்ஸ்:

தேன்:

ஆயுர்வேத மருத்துவம்படி, தேன் அற்புதமான மருந்து. இருமல், சளி இருக்கும்போது, இது தொண்டையில் ஏற்பட்டிருக்கும் புண் குணமாக உதவும். சூடான் நீரில் ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து அருந்தலாம். க்ரீன் டீ உள்ளிட்டவைக்கு தேன் பயன்படுத்துவம் நல்லது. இதோடு, புதினா, எலுமிச்சை சாறு ஆகியவற்றையும் சேர்ப்பது நல்லது. 

இஞ்சி டீ:

இஞ்சி தொற்று பாக்டீரியக்களுக்கு எதிராக போராடும் பண்புகளை கொண்டுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். இருமல், சளி பிரச்சனையை தீர்க்க உதவும். கொதிக்கும் தண்ணீரில் இஞ்சியை துருவி சேர்த்து நன்றாக கொதித்ததும் தேன் சேர்த்து அருந்தலாம்.

உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்

இருமல், தொண்டையில் தொற்று ஏற்பட்டால், கொதிக்க வைத்த நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் நல்லது. 

மஞ்சள், மிள்கு பால்:

மஞ்சள், மிளகு இரண்டும் ஆண்டிசெப்டிக் பண்பை கொண்டிருக்கின்றன. இது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். நன்றாக காய்ச்சிய பாலில், ஒரு சிட்டை மஞ்சள், ஒரு டீபூன் மிளகு சேர்த்து அருந்தலாம். இனிப்புக்கு தேன் அல்லது வெல்லம் சேர்க்கலாம்.

அதிமதுரம்:

சளி,இருமல் பிரச்சனைக்கு அதிமதுரம் மிகவும் நல்லது. டீ, க்ரீன் டீ குடிக்கும்போது அதில் அதிமதுரம் சேர்க்கலாம். தண்ணீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி அதையும் அருந்தலாம்.

நீராவி பிடிப்பது:

தலையில் நீர்கோர்த்து இருந்தால், சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் அதை சரிசெய்ய ஆவி பிடிப்பது நல்லது. இந்த முறை எல்லாருக்கும் ஏற்றதாக இருக்காது. மூச்சுப் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உகந்தது இல்லை. அதோடு, தண்ணீரில் வேப்பிலை, விக்ஸ், தைலம், உள்ளிட்டவற்றை சேர்த்து ஆவி பிடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பது நல்லது. தேவையெனில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கலாம். ஆனால், வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

மூச்சுப்பயிற்சி:

சளி இருக்கும்போது உடல் ஒத்துழைத்தால் மூச்சுப்பயிற்சி செய்யலாம். அதிகம் வியர்வை வராத மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது. 

கொதிக்க வைத்து வடிக்கட்டிய தண்ணீர்:

 கொதிக்க வைத்து வடிக்கட்டிய தண்ணீரை குடிப்பது நல்லது தீவிரமாக நோய் தொற்று, காய்ச்சல் உள்ளிட்டவை இருப்பின் உடனே மருத்துரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

புதினா, நெல்லிக்காய், எலுமிச்சை, சித்தரத்தை, சுக்கு உள்ளிட்டவற்றை சாப்பிடுவது நல்லது.

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏபிபி நாடு ஏற்காது.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget