மேலும் அறிய
படுத்த உடனே ஜம்முனு தூங்கனுமா ? - அப்போ இத பாலோ பண்ணுங்க...!
எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட அனைவரும் படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு நமது தூக்கமின்மையை போக்க முயற்சி மேற்கொள்வோம்
தூக்கமின்மை
தூக்கமின்மை என்பது நம்மில் நிறையபேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகும். அல்லது தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும். அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட அனைவரும் படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு நமது தூக்கமின்மையை போக்க முயற்சி மேற்கொள்வோம். அப்படி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தவிக்கும்போது ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ணவேண்டும். நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவாக இருக்கும்னு, நினைக்கிறீங்களா? வேற ஒண்ணுமல்ல. குழப்பம்தான். சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாலும் கூட தூக்கம் வராது. ஆனால் இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்.
செர்ரி பழங்கள்
மெலடோனின் என்ற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் இந்த செர்ரிப்பழங்கள். இதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
ஓட்ஸ் மீல்
ஓட்ஸ் கஞ்சியினு சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட்ஸ் மீல்சொல் சொல்லுவாங்க. உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேற்கண்ட 4 உணவுகளும் புதிதானது. பால் மட்டும் பழசுதான்.
வாழைப்பழம்
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வாழைப்பழத்துல நிறைய இருக்கு. இது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமிமோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்த எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலமானது. மூளைக்குள்ளே சென்று 5 எச்.டி.பி என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 எச்.டி.பியானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
டோஸ்ட்
நாம பொதுவா காலை உணவாக அதிகம் சாப்பிடுகிறது டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion