மேலும் அறிய

Fruits: ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் பழங்கள் என்னென்ன? சாப்பிட்டால் என்ன நன்மை?

பழங்கள் ருசியானவை மட்டுமல்ல ஆரோக்கியமானவையும் கூட. நோய் எதிர்ப்பு சக்தியும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் பண்புகளும் கொண்டவை.

பழங்கள் ருசியானவை மட்டுமல்ல ஆரோக்கியமானவையும் கூட. நோய் எதிர்ப்பு சக்தியும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் பண்புகளும் கொண்டவை. பழங்கள் சிலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். மூன்று வேலையும் உணவிற்கு பதிலாக பழங்களை கொடுத்தால் கூட சாப்பிட்டு விடுவார்கள். சிலருக்கு பழங்கள் என்றாலே ஒவ்வாமை. எந்த பழத்தையும் சாப்பிட பிடிக்காது.பழங்கள் காலை வெறும் வயிற்றில் காலை உணவாக சாப்பிடலாம்.

உணவிற்கு முன் பழங்களை சாப்பிட்டு அரை மணிநேரத்திற்கு பிறகு மற்ற சமைத்த உணவுகளை சாப்பிடலாம். இரவும் உணவிற்கு முன் பழங்களை சாப்பிடலாம்.  ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகையான பழங்கள் சாப்பிட வேண்டும். இது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். பழங்கள் அனைத்தையும் சேர்த்து பழக்கலவையாக எடுத்துக்கொள்ளலாம். 

நெல்லிக்கனி:

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட். நெல்லிக்கனியில் 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து, நார் சத்து, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களும் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், வைட்டமின் பி மற்றும் சி கொண்டதோடு காலிக் அமிலமும் பாலிபீனாலும் உள்ளது.இன்று ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நெல்லிக்காய், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் மருத்துவ ரிஷிகளான சரகராலும் சுஸ்ருதராலும் தமது மருந்துகளில் பயன்படுத்தப்பட்டது.

அத்திப்பழம்:

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

பச்சை திராட்சை:

பொதுவாக திராட்சைகளில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை உள்ளன.உங்களுக்கு உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள pterostilbene என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளும். திராட்சையில் காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற எலும்புகளின் வலிமைக்கும், உருவாக்கத்திற்கும் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.  

கருப்பு திராட்சை:

திராட்சை அதுவும் குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும். திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை சிறந்தது. கருப்பு திராட்சையை அதிகமாக சாப்பிடக்கூடாது, ஏனெனில் சர்க்கரை உள்ளடக்கம் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.

மாதுளை:

ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget