மேலும் அறிய

குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா? இந்த பாஸ்தா ரெசிபி ட்ரை பண்ணுங்களேன்!

High-Protein Spinach Pesto Pasta: புரோட்டீன் சத்து மிகுந்த பாஸ்தா செய்முறை பற்றி இங்கே காணலாம்.

மாதத்தில் ஒருமுறையாவது பாஸ்தா சாப்பிட வேண்டும் என்ற விரும்புபவரா? ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்ற தேர்வும் இருப்பின், கீரை, பெஸ்தோ சாஸ் உடன் பாஸ்தா செய்து சாப்பிடலாம். கீரை சாப்பிட விருப்பம் இல்லாத குழந்தைகளுக்கும் இதை செய்து கொடுக்கலாம். 

பாஸ்தாவில் கொஞ்சம் கீரை சேர்த்து கொள்ளலாம். அதிகம் கசப்பு இல்லாத கீரை உடன் திருநீற்றுப்பச்சிலை சேர்த்து பாஸ்தா சாஸ் தயாரிக்கலாம்.  பென்னே, மேக்ரோனி, Fettuccin, ஸ்பிரிங் பாஸ்தா உள்ளிட்ட பல வகைகளில் பாஸ்தா கிடைக்கின்றன. அதை பயன்படுத்தலாம். மூன்று வேளை உணவிலும் புரோட்டீன் இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும். பாஸ்தா சாஸ் தயாரிக்கும்போது அதில் பனீர் சேர்க்கலாம். இது சாஸ் திக்காக இருக்கவும் உதவும் அதிக அளவில் சீஸ் சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.

புரோட்டீன் கீரை பாஸ்தா:

என்னென்ன தேவை?

பாஸ்தா - ஒரு கப்

திருநீற்றுப்பச்சிலை -  1/2 கப்

பாலக்கீரை விழுது - ஒரு கப்

முந்திரி - ஒரு கப்

பனீர் - ஒரு கப்

சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா ஒன்று

துருவிய சீஸ் - சிறிதளவு

க்ரீம் - அரை கப்

பூண்டு - 2 பல்

பால் - ஒரு கப்

உப்பு -தேவையான அளவு

ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன் (தேவையான அளவு)

செய்முறை:

மூன்று வண்ண குடைமிளகாய், பூண்டு, ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும். எந்த கீரை வகையாக இருந்தாலும் அதை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து வேக வைக்கவும். இதோடு, திருநீற்றுப்பச்சிலை சேர்க்கவும். வேக வைத்த கீரை நன்றாக ஆறியதும், பனீர், முந்திரி உள்ளிட்டவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். 1 நிமிடங்களுக்குள் அரைத்து எடுக்கவும். முந்திரி சேர்ப்பதற்கு பதிலாக வால்நட், பாதாம் ஆகியவற்றை சேர்க்கலாம். 

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின், அதில் பாஸ்தா, நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள் ஆகியவற்றை கலந்து 1 நிமிடம் வதக்கவும். பாஸ்தாவை தனியே வேக வைத்து எடுக்கவும். இதில் பால், கொஞ்சம் க்ரீம், சீஸ் சேர்க்கலாம். தேவையெனில் சிறிதளவு பாஸ்தா வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம். பாஸ்தாவிற்கு தேவையானவற்றை கலந்து மூடி வைத்து 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும். அதில் ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், அரைத்த கீரை விழுது, சீஸ், கொஞ்சம் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான். புரோட்டீன் சத்து நிறைந்த பாஸ்தா தயார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Adhya S (@auraartofhealthyliving)

பாஸ்தாவை வேக வைக்கும்போது கவனிக்கவும்..

பாஸ்தே குழையாமல் இருக்கவும், பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, வேக வைக்கும்போது சிலவற்றை பின்பற்றலாம்.  தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை சேர்க்கவும். கூடவே தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது. பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது.  ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். அதனாலேயே தண்ணீர் நன்றாக கொதிநிலை வந்ததும் பாஸ்தாவை சேர்க்க வேண்டும். 

7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிவிட வேண்டும்.பின், அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும். எல்லா வகையான பாஸ்தாவையும் இப்படி வேக வைக்கலாம். பாஸ்தா செய்யும்போது வொயிட் சாஸ், ரெட் சாஸ் வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம். பாஸ்தோடு இறைச்சி வகைகள், காய்கறி, காளான், பனீர் ஆகியவற்றை சேர்த்து செய்யலாம். சிறுதானியங்கள் கொண்டு செய்யப்படும் பாஸ்தா கடைகளில் கிடைக்கிறது. 

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Embed widget