மேலும் அறிய

ஸ்வீட் மீது சில்வர் கலர்! ஏன் தெரியுமா? அதிலும் இருக்கும் போலி! இப்படி கண்டுபிடிங்க!!

இனிப்புகள் மீதுள்ள சில்வர் நிற பேப்பர் என்ன? அதனால் என்ன பயன் என்பது பற்றி தெரிந்து கொள்ளங்கள்.

இனிப்பு என்று சொன்னாலே, அதன் சுவை நாவில் ஒட்டிக்கொள்ளும். நம் கற்பனையில், எல்லா இனிப்புகளும் நொடியில் வந்துபோகும், இல்லையா? வயதுவித்தியாசமின்றி இனிப்பு வகைகள் என்றால் எல்லோருக்கும் பிரியம்தான். இனிப்புக் கடைகளில் ட்ரேகளில் வகைகள் பிரித்து அடுக்கப்பட்டிருக்கும் இனிப்புகளைப் பார்த்தேலே நா ஊறும் இல்லை. அப்படியே, நாம் இனிப்புகளின் மீது இருக்கும் சிலவர் நிற ஜரிகை பேப்பர்களை கவனித்திருப்போம். அது என்ன என்ற கேள்வியும் நம்மிடம் இருந்திருக்கும். இனிப்புகள் மீது ஒட்டப்படும் சிலவர் நிற பொருள் என்ன? அதன் பயன் என்ன? இதற்கான விடையை இக்கட்டுரையில் காணலாம்.

இனிப்புகள் மீது ஒட்டப்படும் சிலவர் நிற பேப்பர்கள் vark silver leaf என்றழைக்கப்படுகிறது. இது சுத்தமான வெள்ளியால் ஆனது. 2.8 மைக்ரோ கிராம் அளவு கொண்டது. ஆசிய மற்றும் சீனா பாரம்பரிய முறையில் வெள்ளி பாத்திரங்கள் உணவு உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படிதான், நம் ஊரில் வெள்ளி பாத்திரங்களில்தான் குழந்தைக்கு உணவு ஊட்டப்படும். ஏனெனில், குழந்தைகளுக்கு பெரிதாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அவர்களை வைரஸ் மற்றும் பாக்டிரீயாவிகளிடம் இருந்து பாதுகாக்கவும், உடல்நலனிற்கு கேடு ஏதும் நடக்காமல் இருக்க வெள்ளி பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. அப்படிதான், இனிப்புகளில் வெள்ளி பேப்பர்கள் பயன்படுத்தப்படுவதும்.

வார்க் சில்வர் லீஃப் (vark silver leaf)-இன் வேலை என்ன?

 வார்க் சில்வர் லீஃப் இனிப்புகளுக்கு மீது ஒட்டப்படுவதால், இனிப்புகள் சீக்கிரம் வீணாகிவிடாமல் இருக்க உதவுகிறது. இந்த வார்க் சில்வர் லீஃப்கள் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடக் சேர்ந்து வினைபுரிகிறது. வைரஸ்,பாக்டீரியா உள்ளிடவைகளை அழிக்க உதவுகிறது. இனிப்புகளில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் தாக்குதல்களை சமாளிக்கவும், நம் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கிறது.

இந்த வார்க் சில்வர் லீஃப் பாக்டீரியாவின் வெளிப்புறச் சுவரை தகர்ப்பதுடன், பாக்டீரியாவின் டி,என்.ஏ. மற்றும் மெம்பரன்ஸ் உள் நுழைந்து அவைகளை அழிக்கிறது. இது 99 சதவீதம் வெள்ளியால் ஆனது. இதை நாம் சாப்பிடுவதால் உடல்நலனுக்கு எவ்வித பாதிப்புகளும் வராது. ஆனால், இன்றைய சந்தையில் இனிப்புகளில் அலுமினியன் ஃபாயில் ஷீட்களும் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த அலுமினியம் ஃபாயில் ஷீட்களை உட்கொண்டால் மூளையை பாதிக்கும் என்கிறது மருத்துவ உலகம். அப்படியிருக்க, இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டறிவது எப்படி?

வார்க் சில்வர் லீஃப் – அலுமினியம் ஃபாயில் ஷீட்கள் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?

அலுமினியம் ஃபாயில் ஷீட் உணவு பொருளை சூடாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், இதை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு.

நீங்கள் கடைகளில் இருந்து இனிப்பு வாங்கும்போது, இனிப்பின் மேல் உள்ள சில்வர் நிற பேப்பரை சிறிது கையில் எடுத்து அதை உள்ளங்கையில் தேய்த்துப் பாருங்கள். உண்மையான வெள்ளி, அதாவது வார்க் சில்வர் லீஃப் என்றால் உங்கள் உள்ளங்கையில் அது முற்றிலுமாக துகளாகிவிடும். இதுவே, அலுமினியம் ஃபாயில் ஷீட் என்றால், குட்டி உருண்டையா வரும்.

இனிப்புகளின் மீது இருக்கும் சில்வர் நிற பொருள் குட்டி பந்து போன்று இருந்தால் அது நிச்சயம் அலுமினியன் ஃபாயில் ஷீட்தான் என்பதை தெரிந்துகொள்ளங்கள்.

இனி, இனிப்பு வாங்கும்போது விழிப்போடு இருங்கள். ஏன்னா, நமக்கு இனிப்பு வகைகள்னா அவ்வளவு பிடிக்குமே. அதை தவிர்க்க முடியாதே, ஆனால், தரமானதா என்று பார்த்து வாங்கி சாப்பிடலாம்.

தலைப்பு செய்திகள்

Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget