மேலும் அறிய

Menstrual Cups: பெண்களே.. நாப்கின்களுக்கு மாற்றான மென்ஸ்ட்ரூவல் கப்..! தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன?

மாதவிடாய் நேரத்தில் துணி, சானிட்டரி பேட், டாம்பூன்ஸ் என்று அடுத்ததாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ள உபகரணமே இந்த மென்ஸ்ட்ரூவல் கோப்பை ஆகும்.

மென்ஸ்ட்ரூவல் கோப்பை பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ் சில உள்ளன. மாதவிடாய் நேரத்தில் பிறப்புறப்புக்குள் செலுத்திக் கொள்ளும் ஒரு கப் தான் இந்த மென்ஸ்ட்ரூவல் கப். துணி, சானிட்டரி பேட், டாம்பூன்ஸ் என்று அடுத்ததாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ள உபகரணமே இந்த மென்ஸ்ட்ரூவல் கோப்பை.

சானிட்டரி பேட், டேம்பூன் ஏன் தவிர்க்கலாம்?

சானிட்டரி பேட், டேம்பூன் எல்லாமே மகளிர்க்கு மாதவிடாய் காலத்தில் பெரும் நிம்மதி தரும் உபகரணமாக இருந்தாலும் அவற்றில் ரசாயனம், வாசனை திரவியம், ரத்தத்தை அதிகமாக உறிஞ்சும் பாலிமர்ஸ் என நிறைய வேதிப் பொருட்கள் இருக்கின்றன. ஆனால் மென்ஸ்ட்ரூவல் கப் வெறும் சிலிகானால் ஆனது. அதனால் இதனை பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம்.

மேலும் மென்ஸ்ட்ரூவல் கோப்பையை ஒவ்வொரு பெண்ணும் தங்கள் ரத்தப் போக்கிற்கு ஏற்ப 4 முதல் 10 மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியே எடுத்து சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்தலாம். அது மட்டுமல்ல அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை கூட ஒரே மென்ஸ்ட்ரூவல் கோப்பையை முறையாக சுத்தம் செய்து பராமரித்து வந்தால் பயன்படுத்தலாம்.

மருத்துவர் ஆலோசனை ஏன் அவசியம்:

மருத்துவம் சார்ந்த எந்த ஒரு உபகரணமாக இருந்தாலும் அதனை மருத்துவரிடம் ஆலோசித்தே பயன்படுத்த வேண்டும். அதனால் பெண்கள் தங்களின் மகப்பேறு மருத்துவரைப் பார்த்து ஆலோசிக்க வேண்டும். அவர் நமது பெல்விக் ஃப்ளோர் தசையின் வலுவை அறிந்து பரிந்துரைப்பார். ஒருவேளை சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு சிறிய கோப்பைகளையும், 30 வயதுக்கு மேற்பட்ட நார்மல் டெலிவரி கண்ட அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கு பெரிய கோப்பைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஏற்கெனவே டாம்பூன் பயன்படுத்தியவர்களுக்கு இது எளிதாக இருக்கும். புதிதாக பயன்படுத்துபவர்கள் ஓரிரு முறையில் கற்றுக் கொள்ளலாம்.சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்களுக்கு மென்ஸ்ட்ரூவல் கோப்பை பொருந்தவே பொருந்தாது.  அதை மருத்துவரிடம் முதலிலேயே சொல்லிவிடவும்.

எப்படி பயன்படுத்துவது? 

மென்ஸ்ட்ரூவல் கோப்பையை முதலில் பயன்படுத்தும் போது அதன் வளைவில் தண்ணீர் அல்லது லூப்ரிகன்ட் (தண்ணீர் சார்ந்த) தேய்த்துக் கொள்ளவும். இப்படிச் செய்வதால் எளிதாக பிறப்புறுக்குள் அதனை செலுத்த முடியும். பின்னர் அதை சி வடிவில் மடித்துக் கொள்ளவும். குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு கோப்பையை உள்ளே செலுத்தவும். கோப்பையின் கீழ் உள்ள தண்டு மட்டுமே வெளியில் இருக்க வேண்டும். கோப்பையை உள்ளே சரியாக செலுத்தினால் உள்ளே சென்றதும் அது விரிந்து வட்ட வடிவில் அமர்ந்து கொள்ளும்.

அதில் மாதவிடாய் ரத்தம் சரியாக சேரும். ஓரிரு முறை இதில் தவறு நேரலாம். ஆகையால் முதன்முறை பயன்படுத்தும்போது நேப்கினும் பயன்படுத்திக் கொள்ளவும். ஒருவேளை உங்கள் நேப்கினில் ரத்தம் பட்டிருந்தால் நீங்கள் கோப்பையை சரியாகப் பொருத்தவில்லை என்று அர்த்தம். நிறைய யூடியூப் காணொளிகளில் மகளிர் நல மருத்துவர்களே பொம்மைகளைப் பயன்படுத்தி மென்ஸ்ட்ரூவல் கோப்பை பயன்பாட்டு முறையை விளக்கியுள்ளனர். அதையும் பார்த்து பயனடையலாம்.

சுத்தப்படுத்துவது எப்படி?

மென்ஸ்ட்ரூவல் கோப்பையை 6 முதல் 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இல்லை சிறிநீர் கழிக்கச் செல்லும் போது அதை வெளியில் எடுத்து க்ளீன் செய்துவிட்டு மீண்டும் இன்சர்ட் செய்து கொள்ளலாம். இந்த கோப்பையை ஒவ்வொரு நாளும் சுடு தண்ணீரில் கழுவி, மென்ஸ்ட்ரூவல் கப் க்ளீனர் கொண்டு சுத்தப்படுத்தலாம். கடினமான சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்தால் மீண்டும் நீங்கள் கோப்பையை உள்ளே செலுத்தும்போது அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம்.

மென்ஸ்ட்ரூவல் கோப்பைகள் செலவு ரீதியாக கையடக்கமானது. அதுபோல் ஒரு மென்ஸ்ட்ரூவல் கோப்பையை மூன்றாண்டுகள் வரை பயன்படுத்தலாம். இதனால் நேப்கின் செலவு குறைவும். இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்தபட்சம் ரூ.300ல் இருந்தே இந்தக் கோப்பை கிடைக்கிறது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தினால் நலம் சேரும்.

தலைப்பு செய்திகள்

Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget