Break-up in love: காதலில் பிரேக்-அப்..ஆரோக்கியமான Good-Bye-ஆக முடிப்பது எப்படி?
ஒருவரை நேசிக்கத் தெரிந்த அதே மனதுக்கு அவருடனான பிரிவை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏன் வருவதே இல்லை.குட்பைக்கள் ஏன் ஆரோக்கியமாக இருப்பதில்லை?
சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து மிகவும் பரபரப்பாக மீடியாவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரம் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்வீட் பல சர்ச்சையையும் எதிர்ப்பையும் கிளப்பியது.
‘ஏமாற்றுபவர்கள் எப்போதுமே வளருவதில்லை’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அவர். சமந்தாவுக்கு எனக் குறிப்பிட்டு அவர் இந்தப் பதிவை இடவில்லை என்றாலும் நாகசைதன்யாவுடனான திரும்ன உறவுக்கு முன்பு சமந்தாவும் சித்தார்த்தும் டேட்டிங் செய்தது பப்ளிக்காகவே அறியப்பட்ட ஒன்று. பின்னர் சித்தார்த்துடனான திடீர் பிரேக் அப்புக்குப் பிறகுதான் சமந்த நாகசைதன்யாவை மணந்தார். அந்த மண உறவு தற்போது முடிவுக்கு வந்ததை அடுத்து சித்தார்த் சமந்தவைத் தாக்கிதான் அந்தப் பதிவை இட்டதாக சோஷியல் மீடியாவில் பலரும் விவாதித்து வந்தனர். பலர் சித்தார்த்தின் ட்வீட்டுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
‘காதலித்தவர் நம்முடன் பிரேக் அப் செய்தால் அவரைக் கொச்சையாகப் பேசுவது என்ன மாதிரியான மனநிலை?’ எனப் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
One of the first lessons I learnt from a teacher in school...
— Siddharth (@Actor_Siddharth) October 2, 2021
"Cheaters never prosper."
What's yours?
சித்தார்த் என்றில்லை, பிரேக் -அப் செய்தால் அவரை கொச்சைபடுத்துவது, திட்டுவது, பழிவாங்குவது தொடங்கி கொலை செய்வது வரைக் கூடச் சென்றுள்ளது காதல். ஒருவரை நேசிக்கத் தெரிந்த அதே மனதுக்கு அவருடனான பிரிவை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏன் வருவதே இல்லை.குட்பைக்கள் ஏன் ஆரோக்கியமானட்தாக இருப்பதில்லை? சித்தார்த்தின் ட்வீட் சரியானதா? காதலித்தவருடன் சுமூகமாக பிரேக் அப் செய்வது எப்படி?
உளவியல் ஆலோசகர் மருத்துவர் சிவபாலன் கூறுகையில், ‘ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில் இருந்து உண்டாகும் உறவுதான் எப்போதுமே ஆரோக்கியமானதாக இருக்கும். தன்னைப் பற்றி மட்டுமே இல்லாமல், மற்றவரை நான் புரிந்துகொள்கிறேன். நீ இவ்வாறுதான், உனது கேரக்டர் இப்படித்தான்..ஆனால் அதையும் தாண்டி இந்த உறவு என்பது முக்கியமானது என வளரும் உறவுகள்தான் மெட்சூர்ட்டான உறவாக இருக்கும். இது பார்ட்னர்களில் இருவருக்குமே பொருந்தும். இதைவிட்டுவிட்டு, எனக்காக நீ அப்படி இருக்கவேண்டும், இப்படி இருக்கவேண்டும் எனத் தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து உருவாகும் உறவுகள் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. அதனால்தான் இந்த உறவுகளில் பிரேக்-அப்களும் சுமூகமாக முடிவதில்லை. மேலைநாடுகளில் உறவுகளில் நுழைபவர்கள் அந்த உறவு முறிந்தபிறகும் நல்ல நட்போடு இருப்பதற்குக் காரணம் இந்த மெச்சூரிட்டிதான்’ என்கிறார்.
பிரபல ஸ்டார் ஜோடிகளான அனுஷ்கா சர்மா- விராட் கோலி பிரிந்து சேர்ந்த கதை நாடறியும். முதலில் பிரேக் அப் செய்த விராட்-அனுஷ்கா ஜோடி, அனுஷ்காவை ஒருவர் தரக்குறைவாகப் பேசவும் அவரை அவ்வாறு பேசியவரை விராட் பொதுவெளியில் கண்டிக்கவும் அவரது ஜெண்டில்மேன் இயல்பைப் பார்த்தே மீண்டும் அனுஷ்கா விராட்டை டேட்டிங் செய்யத் தொடங்கினார்.
நம்முடைய பார்ட்னர் நம்மைப் பிரிந்தாலும் அவருடனான நட்பு என்பது என்றைக்குமே விலைமதிப்பில்லாதது, எந்த உறவின் ஆணிவேரே அந்த நட்புதான் என்பதை மனதில் நிறுத்தினால் குட்பைக்களும் ஆரோக்கியமானதாக அமையும்.
Also Read: ’ரஜினி மாஸ் - எஸ்.பி.பி. வாய்ஸ்!’ - டாப் 10 ப்ளேலிஸ்ட்!