மேலும் அறிய

முதுநிலை பட்டதாரியா நீங்கள்? தமிழக அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது இரண்டு விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எம்.சி முடித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) மீன்வளம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி இயக்குனர் -மீன்வளத்துறை பணிக்கானத் தகுதிகள் ( Assistant Director of fisheries)

காலிப்பணியிடங்கள் – 2

வயது வரம்பு – விண்ணப்பத்தாரர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால் SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு எந்தவித வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.F.Sc., Degree (or) A Doctorate in Zoology or Marine Biology (or) M.Sc.,(Bio-Technology) with a basic B.F.Sc.,Degree (or)  A first class degree in M.A/M.Sc., in Zoology or Marine Biology முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் – ரூ.56,100 – 1,77,500 என நிர்ணயம்

  • முதுநிலை பட்டதாரியா நீங்கள்? தமிழக அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

வேதியியலாளர் (Chemist in Industries and Commerce Department) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 3

வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால் SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in M.Sc., in Chemistry or Chemical Technology or Industrial Chemistry முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.37,700 – 1,19,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://www.tnpsc.gov.in/ அல்லது https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளப்பக்கத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

மீன்வளத்துறை உதவி இயக்குனர் பணிக்கு ஜனவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேதியியலாளர் பணிக்கு வருகின்ற ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ. 150 விண்ணப்பக்கட்டணமாக  செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • முதுநிலை பட்டதாரியா நீங்கள்? தமிழக அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் தமிழ் மொழித் தகுதித்தேர்வு மற்றும் பொது அறிவு வினாக்கள் இடம் பெற்றிருக்கும்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.tnpsc.gov.in/Document/english/20_2021_AD_FISHERIES_ENG.pdf மற்றும் https://www.tnpsc.gov.in/Document/english/21_2021_CHEMIST_ENGLISH.pdf ஆகிய இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Udumalpet Power Cut (5-01-2026): உடுமலைப்பேட்டையில் நாளை முக்கியப் பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை முக்கியப் பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Embed widget