10ஆம் வகுப்பு படித்தால் போதும் ! ரூ.50,000 சம்பளத்தில் வேலை... முழுவிவரம் உள்ளே !
கடலூர் மாவட்டத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, எனவே தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு கீழ் உள்ள கிராம ஊராட்சி செயலர் என்ற அரசு வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, எனவே தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிராம உதவியாளர் பணி
கிராம உதவியாளர் என்பது தமிழ்நாட்டில் வருவாய்த் துறையில் உள்ள ஒரு அரசுப் பணியாகும், இது முன்பு தலையாரி என அழைக்கப்பட்டது. இந்த பதவி ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது கிராம நிர்வாக அதிகாரிக்கு உதவியாக செயல்படுகிறது.
1,482 கிராம ஊராட்சி செயலர் காலியிடங்கள்
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு கீழ் உள்ள கிராம ஊராட்சி செயலர் என்ற அரசு வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 1,482 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிரப்பப்படுவதால் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே வேலை கிடைக்கும்.
கடலூரில் 37 பணியிடங்கள் விவரம்:
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 37 காலியிடங்கள் உள்ளன. இதில் பொதுப்பிரிவில் 13 இடங்களும், BC பிரிவில் 9 இடங்களும், BC முஸ்லிம் பிரிவில் 2 இடங்களும், MBC/DNC பிரிவில் 7 இடங்களும், SC பிரிவில் 5 இடங்களும், SC(A) ஒரு இடமும் நிரப்பப்படவுள்ளது. பெண்களுக்கு என பிரித்தியேகமாக 11 இடங்கள் நிரப்பப்படவுள்ளது.
ஊதியம் : மாதம் Rs.15,900 முதல் Rs.50,400 வரை ஊதியம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 8ம் வகுப்பு வரை தமிழ் மொழி படித்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- பொதுப்பிரிவு பிரிவினர் : 18 வயது முதல் 32 வயது வரை.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் பிரிவினர் - 18 வயது முதல் 34 வரை.
- ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்தியர்), பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை - 18 முதல் 37 வயது வரை.
- மாற்றுத்திறனாளிகள் - அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
- முன்னாள் ராணுவ வீரர்கள் (பொதுப்பிரிவு) - 18 வயது முதல் 50 வயது வரை
- முன்னாள் ராணுவ வீரர்கள் (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் பிரிவு) - 18 வயது முதல் 55 வரை இருக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 09.11.2025 தேதிக்குள் விண்ணபிக்கலாம்.
முக்கிய நிபந்தனைகள்:
விண்ணப்பதார்கள் கல்வித்தகுதி, சாதி சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றுக்கான ஆதரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இனச்சுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே எடுத்துகொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் விவரம்:
பொது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – ரூ.100 மற்றும் ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.50 மட்டும்.





















