TNSTC JOB: 3274 காலிபணியிடங்கள்...போக்குவரத்துக்கழகத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு
TNSTC JOB: 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கடந்த மார்ச் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் இன்று ஏப்ரல் 21-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாகவுள்ள 3,274 பணியிடங்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளுக்கு மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பங்களை நிரப்ப இன்றே(21.04.25) என்று போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகங்களில் வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது, அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 364 காலி இடங்களும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318காலி இடங்களும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 322 காலி பணி இடங்களும், சேலம் போக்குவரத்து கழகம் 486 காலி இடங்களும், கோயம்புத்தூர் போக்குவரத்து கழகம் 344 காலி இடங்களும், கும்பகோணம் போக்குவரத்து கழகம் 756 காலி இடங்களும் , மதுரை போக்குவரத்து கழகம் 322 காலி இடங்களும் , திருநெல்வேலி போக்குவரத்து கழகம் 362 பணியிடங்கள் என மொத்தம் 3,274 பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்றே கடைசி நாள்:
இந்த 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கடந்த மார்ச் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் இன்று ஏப்ரல் 21-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது வரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
3,274 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன@CMOTamilnadu @mkstalin @Udhaystalin@mp_saminathan @sivasankar1ss @arasubus@mtcchennai#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/mszZxafoAn
— TN DIPR (@TNDIPRNEWS) March 21, 2025
என்ன தகுதிகள்:
- 01-07-2025 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
- பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- செல்லத்தக்க வாகனம் ஓட்டும் உரிமம், குறைபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம்.
- செல்லத்தக்க நடத்துனர் உரிமம் 01-01-2025 முன்னதாக பெற்றதாக இருக்க வேண்டும்.
- உயரம் குறைந்த பட்சம் 150 செமீ, எடை 50 கிலோ கிராம்
- தெளிவான குறைபாடுகளற்ற கண் பார்வை எவ்வித உடல் அங்க குறைபாடுகளும் அற்றவராக இருக்க வேண்டும்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

