TNUSRB: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை இருக்கு! உடனே விண்ணப்பியுங்கள்!
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு; முழு விவரம் இங்கே!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 3,552 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆன்லைனின் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க நாளை (ஆகஸ்ட் 15) கடைசி நாள்.
பணிய விவரம்:
அறிவிப்பின் படி, 2,180 காவல்துறையில் உள்ள பணியிடங்களும், விசாரணைப் பிரிவில் 1,091 பணியிடங்களும், சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பிரிவில் 161 காலிப் பணியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவில் 120 காலிப் பணியிடங்களும் தகுதி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./ என்ற வலைதளபக்கத்திற்கு செல்லவும்.
இதில் சுய விவரங்களை பூர்த்தி செய்து முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
முழு விவரங்களை பூர்த்தி செய்தவுடன் உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்தும் வைத்துகொள்ளலாம்.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தம் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள், தமிழ் மொழிவழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவு எனில் 18 முதல் 26 வயதுக்கு மிகாவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவுகளில் 32 வயதிற்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, எவ்வித குற்ற வழக்குகளும் இல்லாதவர் என்ற நற்சான்று விசாரணை, ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
மேலும் தகவலுக்கு.. https://tnusrb.tn.gov.in/pdfs/notification.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்