TN MRB Recruitment 2025: ரூ.72 ஆயிரம் ஊதியம், 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க- MRB அறிவிப்பு- முழு விவரம்
TN MRB Health Inspector Recruitment 2025: 1429 சுகாதார ஆய்வாளர் நிலை - II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி? விரிவாக காணலாம்.

தமிழ்நாடு பொது சுகாதார துணைப் பணியில் சுகாதார ஆய்வாளர் (தரம்-II) பதவிக்கு ஆன்லைன் முறையில் 16.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.
இந்தப் பணி இடங்கள், தற்காலிக அடிப்படையில் நேரடி முறையில் நியமிக்கப்படுவதாகவும். இதற்கு ஆண் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சுகாதார ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்க வேண்டும். எந்த சாதிப் பிரிவுக்கும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
கல்வித் தகுதி
- 12ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்திருக்க வேண்டும்.
- 10ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தைக் கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும்.
- பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / சுகாதார ஆய்வாளர் பாடநெறி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை- 1429
ஊதிய விவரம்
ரூ.19,500 – 71,900/-
தேர்வு முறை
தமிழ் மொழி தகுதித் தேர்வு (10ஆம் வகுப்பு தரத்தில்) – 50 மதிப்பெண்களுக்கு
கணினி அடிப்படையிலான தேர்வு/ எழுத்துத் தேர்வு – 100 மதிப்பெண்களுக்கு
தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது.
கொரோனா காலத்தில் வேலை பார்த்தவர்களுக்கு, தகுதிக்கு ஏற்ப கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு- ரூ.600
எஸ்சி/ எஸ்சிஏ/ எஸ்டி – ரூ.300
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.mrb.tn.gov.in/ என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் தேவையான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
முழுமையான விவரங்களை தேர்வர்கள் https://tnmrbhi25.onlineregistrationform.org/MRBHIDOC/Advertisement_Notification.pdf என்ற அறிவிக்கையை க்ளிக் செய்து காணலாம்.
இந்த இணைப்பில் https://tnmrbhi25.onlineregistrationform.org/MRBHIDOC/syllabus.pdf தேர்வுக்கான பாடத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முன் https://tnmrbhi25.onlineregistrationform.org/MRBHI/instructions2.jsp என்ற இணைப்பில் உள்ள வழிமுறைகளை முழுமையாக படித்துப் பார்க்கவும்.
தொடர்புகொள்ள
இ மெயில் முகவரி: mrbhi@onlineregistrationform.org
சந்தேகங்களுக்கு - 022 42706503, 044 24355757





















