மேலும் அறிய

Job Fair: தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு முதல் முதுநிலை வரை இளைஞர்களுக்கு காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்பு!

தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் சனிக்கிழமை(21.11.25) காலை 9 மணி முதல் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி: வேலை தேடும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு எப்போது நடைப்பெறவுள்ளது?

தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் சனிக்கிழமை(21.11.25) காலை 9 மணி முதல் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளன.

100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு

தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் இதில் பங்கேற்க உள்ளன. பல துறைகளில் பணியாளர்களுக்கு தேவை உள்ளதால்  இந்த முகாம், வேலை தேடும் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8-ம் வகுப்பு முதல் முதுநிலை வரை அனைவருக்கும் வாய்ப்பு

8-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை — பி.இ, டிப்ளமோ, நர்சிங், ஐ.டி.ஐ போன்ற துறைகளில் தகுதி பெற்ற அனைவரும் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.

ஆன்லைன் பதிவு அவசியம்

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்கிற இணையத்தளத்தில்
 Candidate Login மூலம் பதிவு செய்ய வேண்டும். வேலையளிப்பவர்கள்: Employer Login மூலம் பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலக டெலிகிராம் சேனல் மற்றும் மின்னஞ்சல்: deo.tut.jobfair@gmail.com மூலம் தெரிந்துக்கொள்ளலாம்

கலந்துகொள்ளும் வேலைநாடுநர்கள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும், அவர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பை ரத்து செய்யப்படாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க நினைவாக நடத்தப்படும் இந்த மாபெரும் முகாம், ஆயிரக்கணக்கானோர் பயனடையும் நிகழ்வாக இருக்கும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget