JOBS: 108 ஆம்புலன்ஸில் பணியில் சேர ஒரு வாய்ப்பு - முழு விபரம் இதோ
நேர்முக தேர்விற்கு கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதல்களை சரிபார்ப்பதற்காக அவசியம் கொண்டு வரவேண்டும்.
அவசர கால சிகிச்சைக்காக கொண்டுவரும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வேலைக்கு சேர விருப்பமுள்ளவர்கள் பணியில் சேர EMERGENCY HEALTH SERVICES வேலை வாய்ப்பு மூலம் வரும் வெள்ளிக்கிழமை தேனி அரசு தலைமை மருத்துவமனையில் ஆள் சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேதி 30-08-2024 வெள்ளிக்கிழமை, காலை : 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, இடம் : தேனி அரசு மருத்துவமனை கல்லூரி
கல்வித்தகுதி : B.Sc நர்சிங், அல்லது GNM, ANM, DMLT( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்கவேண்டும் ) அல்லது Life Science Graduates (B.ScZoology, Botony, Bio-Chemisty, Micro-biology, Bio -Technology)
மாத ஊதியம்: ரூ.16,080/- (மொத்த ஊதியம்)
பாலினம் : ஆண் மற்றும் பெண்
தேர்வு முறை : 1. எழுத்துத் தேர்வு 2.மருத்துவ நேர்முகம்.உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணிதொடர்பானவை 3. மனிதவளத் துறையின் நேர்முகம்.
குறிப்பு : 1. தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையானவகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்தநடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும் (பயிற்சிக்காலத்தில் தங்கும்வசதி செய்து தரப்படும்.
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
மாத ஊதியம் : ரூ.15,820/- (மொத்த ஊதியம்)
வயது : நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
பாலினம் : ஆண் மற்றும் பெண்
உயரம் : 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.
ஓட்டுநர் தகுதி : இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்துகுறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகனஉரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவுபெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை : 1. எழுத்துத் தேர்வு, 2.தொழில் நுட்பத் தேர்வு3.மனிதவள துறை நேர்காணல், 4.கண்பார்வைசம்பந்தப்பட்ட தேர்வு, 5. சாலை விதிகளுக்கான தேர்வு
குறிப்பு: தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முழுமையான வகுப்பறை, மருத்துவமனை மற்றும்ஆம்புலன்ஸ் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். (பயிற்சி காலத்தில் தங்கும் வசதி உண்டு)
பணி நேரம் : 12 மணி நேரம் Shift என்ற முறையில் இரவு பகல் என மாறும்
குறிப்பு : நேர்முக தேர்விற்கு கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதல்களை சரிபார்ப்பதற்காக அவசியம் கொண்டு வரவேண்டும்.