
மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு... மாவட்ட கலெக்டர் அறிவிப்பு என்ன?
மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கான நேர்காணல் முகாம் வரும் டிச.2ம் தேதி நடக்கிறது.

தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கான நேர்காணல் முகாம் வரும் டிச.2ம் தேதி நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பணியிடங்களை மாற்றுத்திறன் வகை வாரியாக கண்டறிந்து அதற்கேற்ப தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் (Empanelled Agencies) மூலம் திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் திறன் பயிற்சிக்கான நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் உதவி இயக்குனர் (திறன் மேம்பாடு) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் முன்னிலையில் 02.12.2024 அன்று நடைபெற உள்ளது.
இம்முகாமில் பயிற்சி பெற விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள், திறன், நேர்காணல் முகாம், மேம்பாடு, வேலைவாய்ப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

