ரூ.42 ஆயிரம் சம்பளத்துடன் தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் பணி. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழக அரசின் எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை போன்ற முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் Fellow and Senior Fellows போன்ற பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏதேனும் இளங்கலைப்பட்டம் பெற்றிருந்தால் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மக்களை சொல்லமுடியாத அளவிற்கு பல்வேறு இன்னல்களை சந்திக்க வைத்தது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் இளம் தலைமுறையான நம் மாணவர்களின் கல்வி மிகவும் மோசமாகிவிட்டது. ஆரம்ப பள்ளியைத் தொடங்கும் மாணவர்களுக்கு உயிர் எழுத்துக்கள் கூட சொல்லத்தெரியாத நிலையில் தான் இருந்துவருகின்றனர். இதனையெல்லாம் சரிசெய்யும் விதமாக தான் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி ஆரம்பிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும் தமிழக அரசின் எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை போன்ற முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு ஊக்கத்தொகை திட்டம் (TamilNadu Education Fellowship) என்ற அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Fellows and senior Fellows போன்ற பணியிடங்கள் மூலம் அரசின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவது முதல், அரசுப்பள்ளி தேவைகளை அடையாளம் காணுதல், கல்வித்தரத்தை உயர்த்துவது போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்னத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
Fellows பணிக்கானத் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
காலிப்பணியிடங்கள் - 114
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு இளங்கலைப்பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
இதோடு தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்- ஏப்ரல் 22 முதல் ஜூன் 15, 2022
பணிக்காலம் – ஜுலை 2022 முதல் ஜூன் 2024 வரை
இப்பணிக்குத் தேர்வாகும் நபர்கள் தங்களது பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரியும் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும். இதோடு உங்களது பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அனுபவ சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பணியின் விபரங்கள்:
அரசுப்பள்ளி தேவைகளை அடையாளம் காணுதல், கல்வித்தேவைகளை நிறைவேற்றுதல், கல்வித்தரத்தை உயர்த்துதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் துணையுடன் உதவ வேண்டும்.
அரசின் முன்னோடித்திட்டங்களை செயல்படுத்த துணைபுரிய வேண்டும்.
திட்டங்களை செம்மையாக செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிபுரிய வேண்டும்.
அரசுத்திட்டங்களின் பயன்களை தர்க்கரீதியாக, பகுத்தறிந்து நுண்ணாய்வு செய்வது போன்ற பணிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
சம்பளம் – மாதந்தோறும் ரூ.32 ஆயிரம் என நிர்ணயம்.
Launching Tamil Nadu Education Fellowship!
— தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை (@tnschoolsedu) April 24, 2022
Inviting applications from passionate young minds to support the novel initiatives undertaken by the School Education Department
To know more: https://t.co/8a69xWtKHt
To apply ---> Application link: https://t.co/7KtGWitiDM#TNSED pic.twitter.com/K8z9PmjIw1
Senior Fellows பணிக்கானத் தகுதிகள்:
கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இளங்கலை அல்லது அதற்கு தொடர்புடைய துறைகளில் முதுகலை நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மொழியில் சரளமாக பேச, எழுத படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். இதோடு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் தெரிந்திருப்பதோடு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்- ஏப்ரல் 22 முதல் ஜூன் 15, 2022வரை
பணிக்காலம்- ஜூலை 2022 முதல் ஜுன் 2024 வரை.
பணியின் விபரங்கள்:
.இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தல், திட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான பயிலரங்கை ஏற்பாடு செய்தல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் மூலம் உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் விரைவாக விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.