மேலும் அறிய

SSC: மத்திய அரசு வேலை: 3,003 காலியிடங்கள்- SSC ஃபேஸ் 14 அறிவிப்பு வெளியீடு! விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்எஸ்சி தேர்வுக்கு தேர்வர்கள் மே 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணங்களை மே 5 வரை செலுத்தலாம்.

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான 'செலக்‌ஷன் போஸ்ட் ஃபேஸ் 14' (Selection Post Phase 14 - 2026) அறிவிப்பை எஸ்எஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 3,003 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப தகுதியான பதவிகளைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் மே 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணங்களை மே 5 வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 11 முதல் 13ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் SSC-யின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், மற்றும் ஒவ்வொரு பதவிக்கான தனித்தனி கல்வித் தகுதிகள் குறித்த முழுமையான விவரங்களை இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

எவ்வளவு மதிப்பெண்கள்? 

கணினி வழியிலான எழுத்துத் தேர்வுஅடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கேள்விகள் கொள்குறி வகையில் அமைந்திருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெற, ஆணையம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயமாகும். அதன்படி:

  • பொதுப் பிரிவினர் - 30%
  • ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் - 25%
  • எஸ்சி/ எஸ்டி மற்றும் இதர பிரிவினர் - 20% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு எப்போது?

இந்தத் தேர்வு ஜூன் மாதம் உத்தேசமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 309 3063 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தேர்வர்கள் தொடர்புகொள்ளலாம்.

கடைசி நாள்களில் இணையதளத்தில் ஏற்படும் சர்வர் நெரிசலைத் தவிர்க்க, தகுதியானவர்கள் முன்கூட்டியே உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களை அறிய: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2026_phase_xiv.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நண்பாஸ்... அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்காகவே வந்துள்ளது: முழு விபரம் உள்ளே!!!
நண்பாஸ்... அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்காகவே வந்துள்ளது: முழு விபரம் உள்ளே!!!
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget