மேலும் அறிய

SBI PO Recruitment 2023: விண்ணப்பித்துவிட்டீர்களா? 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை - இன்றே கடைசி!

SBI PO Recruitment 2023: எஸ்.பி.ஐ. அறிவித்துள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ். பி.ஐ.-ன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள  அறிவிப்பின்படி, 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் 30-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கால அவகாசம் அக்டோபர் 3,தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த வேலைவாய்ப்பிற்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். 

SBI PO Recruitment 2023: விண்ணப்பித்துவிட்டீர்களா? 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை - இன்றே கடைசி!

பணி விவரம்:

ப்ரோபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers) 

மொத்தப் பணியிடங்கள்- 2000

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 31.12.2023 -ன் அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயதிற்கு குறைவாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் கூடாது.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்:

இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.

SBI PO Recruitment 2023: விண்ணப்பித்துவிட்டீர்களா? 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை - இன்றே கடைசி!

கவனிக்க :

ஆன்லைன் பதிவு செய்தல்: 07.09.2023 முதல் 27.09.2023 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்;

தேர்வுக்கான பயிற்சி : நவம்பர் 2023

முதல்நிலை எழுத்துத் தேர்வு: நவம்பர் /டிசம்பர், 2023

 முதன்மை எழுத்துத் தேர்வு : 2023 / நவம்பர்

திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/ ஜனவரி

திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/ ஜனவரி

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - பிப்ரவரி / மார்ச், 2023

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம்  செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ஊதிய விவரம்:

ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது.

முதல் நிலை தேர்வு:

SBI PO Recruitment 2023: விண்ணப்பித்துவிட்டீர்களா? 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை - இன்றே கடைசி!
முதன்மை தேர்வு:

SBI PO Recruitment 2023: விண்ணப்பித்துவிட்டீர்களா? 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை - இன்றே கடைசி!

இறுதித் தேர்வு:

SBI PO Recruitment 2023: விண்ணப்பித்துவிட்டீர்களா? 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை - இன்றே கடைசி!

எழுத்து தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா:

எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://bank.sbi/careers  / https://www.sbi.co.in/careers

முக்கிய தேதிகள்

SBI PO Recruitment 2023: விண்ணப்பித்துவிட்டீர்களா? 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை - இன்றே கடைசி!

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/36548767/060923-1_detailed+Advt.+English+PO+23-24_07.09.2023.pdf/9c9b6e4b-9fdd-df11-3194-d40cdb336aac?t=1694002437061 -லிங்கை கிளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.10.2023

கோவையில் அரசு வேலை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

ஈப்பு ஓட்டுநர் 

கல்வித் தகுதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 

வயது வரம்பு:

இந்தப் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

1) ஈப்பு ஓட்டுநர் ஊதியம்: ரூ.19,500/- (13,500 -62,000)

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

5. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
மதுக்கரை

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://coimbatore.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  09.10.2023 மாலை 05.45 வரை 

அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/09/2023091264.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
TN Weather Alert: கதற விடும் கடும் குளிர்.! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா.? டெல்டா வெதர்மேன் சொல்லுவது என்ன.?
கதற விடும் கடும் குளிர்.! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா.? டெல்டா வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
Embed widget