Jobs: நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 36 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருத்துவ பணியாளர் உட்பட மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் உள்ளது.

சேலம் மாநகராட்சியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 7 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவ அலுவலர், செவிலியர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவ அலுவலர் 7, செவிலியர் 7, சுகாதார ஆய்வாளர் 7, மருத்துவ பணியாளர் 7, மாவட்ட தர ஆலோசகர் 1, மருந்தாளுநர் 1, உதவி கணக்காளர் 1, ஆடியோல ஜிஸ்ட் 1, பல் மருத்துவ உதவியாளர் 1, மேலாளர் 1, ஏஎன்எம் 1, தூய்மை பணியாளர் 1 என மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் உள்ளது. மருத்துவ அலுவலர் பணிக்கு எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். செவிலியர் பணிக்கு டிப்ளமோ பிரிவில் நர்சிங் தேர்ச்சியும், மருந்தாளுநர் பணிக்கு டி.பார்ம் படித்திருக்க வேண்டும்.
இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது ஆகும். கொரோனா தொற்று காலத்தில் பணி புரிந்தமைக்கான சான்று இருந்தால், சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலரிடம் சான்று பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பபடிவங்களை, சேலம் மாவட்ட இணையதள முகவரியில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மை கட்டிட வளாகம், சேலம்-636001." என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 24 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தகுதியான நபர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று நேர்காணல் நடத்தப்பட்டு, ஏப்ரல் 2 ஆம் தேதி நேர்காணல் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

