பழனி கோவிலில் அறநிலையத்துறை பணிகள்..விண்ணப்பிப்பவர்கள் கவனத்துக்கு..
பழனி கோயிலில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. என்னென்ன பதவிகள் இருக்கின்றன, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை குறித்து காணலாம்.
பழனி கோயிலில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்:
பழனி கோயிலில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. என்னென்ன பதவிகள் இருக்கின்றன, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து காணலாம்.
பதவிகள்:
1.மனநல மருத்துவர்- 1
2.மருத்துவ அலுவலர்-1
3.செவிலியர்-2
4.இல்ல காப்பாளர்- 1
5.சமூகப் பணியாளர் -2
6.பராமரிப்பு உதவியாளர்-4
7.தொழில் பயிற்சியாளர்-1
8.பாதுகாவலர் -2
நிபந்தனைகள்:
விண்ணப்பிக்க விரும்புவோர் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது 35 வயதைக் கடந்தவராக இருக்க கூடாது. ஏதேனும் கோயில்களில் பணியில் இருந்து குற்றச் செயல்களில் புரிந்த காரணத்தால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை.மேலும் உடல் ஆரோக்கியம் உடையவராக இருக்க வேண்டும். இப்பாணியானது தற்காலிகமானது . இப்பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவர்கள், ஒப்பந்த அடிப்படையிலே பணி அமர்த்தப்படுவார்கள்.14 பணியிடங்களுக்கான பதவிகளுக்கு எண்ணிக்கையை உயர்த்தவோ குறைக்க்வோ நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை ஜீன் மாதம் 6-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.அதற்குப்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.ஏற்று கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் விண்ணப்பிக்க, பதவிக்கு உரிய தகுதிச் சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். சான்றிதழ்களை இணைக்கும் போது அதில் gazetted officer இடம் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது. நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
விண்ணப்பம் மற்றும் வேலை தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள பழனி கோயிலின் இணையதளத்தை பார்க்கவும்:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்