மேலும் அறிய

Free Car Driving Training: ஒரு ரூபாய் செலவு இல்லை.! கார் ஓட்டுனர் பயிற்சி, உணவு, சீருடை என எல்லாமே FREE தான்- சூப்பர் அறிவிப்பு

Free Car Driving Training : இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில், இலவசமாக கார் ஓட்டுனர் பயிற்சியோடு, உணவு மற்றும் சீருடையும் இலவசமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தும் வருகிறது. அதிலும் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கவும் வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க அரசின் சார்பாக உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கான பயிற்சியும் வழங்கி கடன் உதவி திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இலவச கார் ஓட்டுனர் பயிற்சி

இதே போல தனியார் நிறுவனங்களும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பயிற்சியானது வழங்கி வருகிறது. அதன் படி, கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவசமாக கார் ஓட்டுனர் (LMV Driver Training) பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க  எந்த வித கட்டணமாக வசூலிக்காமல் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகின்ற 30-12-2025 முதல் 07-02-2026 வரை 30-நாட்கள் நடைபெற உள்ளது.

உணவு, சீருடை இலவசம்

இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும், பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-வயதிற்கு மேல் 45-வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது 100 நாள்  வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இலவச ஓட்டுநர் பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் எனவும், முன்பதிவு செய்வதற்கான எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. 
 8778323213 
 7200650604 
 0424-2400338 

முகவரி
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், அரசினர் பொறியியல் கல்லூரி
(IRTT) Road, வாசவி காலேஜ் அருகில்,சித்தோடு, ஈரோடு.

இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

நாளுக்கு நாள் போக்குவரத்து சேவைகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி சொந்தமாக கார் வாங்கி முன்னேறும் வகையில் இந்த பயிற்சி வகுப்பு உதவியாக இருக்கும். எனவே இளைஞர்களுக்கு இந்த பயிற்சியின் மூலம் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் ஓட்டுநர் பயிற்சி பெற்ற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்
குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு ! விண்ணப்பிப்பது எப்படி? விபரம் இதோ!..
குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு ! விண்ணப்பிப்பது எப்படி? விபரம் இதோ!..

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget