ஆதார் அட்டையில் புகைப்படத்தை எப்படி மாற்றுவது?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

ஆதார் அட்டை ஒவ்வொரு இந்தியருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும்.

Image Source: freepik

ஆதார் அட்டை இல்லாமல் அரசு மற்றும் அரசுசாரா திட்டங்களின் பயன்களைப் பெறுவதில் நிறைய சிரமங்கள் ஏற்படலாம்.

Image Source: freepik

நீங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்...

Image Source: freepik

முதலில், ஆதார் வழங்குநரான UIDAI இன் uidai.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

Image Source: freepik

அதில், My Aadhaar பகுதியில் உள்ள என்ரோல்மென்ட் மற்றும் அப்டேட் படிவங்கள் என்பதை கிளிக் செய்து படிவத்தைப் பதிவிறக்கவும்.

Image Source: freepik

இந்த படிவத்தை அச்சிட்டு, அதில் உங்கள் விவரங்களை நிரப்பி, அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்கவும்.

Image Source: freepik

அப்போது உடனடியாக படிவம் சரிபார்க்கப்படும், மேலும் உங்கள் புதிய புகைப்படத்தை எடுப்பதோடு கருவிழி ஸ்கேன் செய்யப்படும்.

Image Source: freepik

இந்த சேவைக்காக உங்களிடம் இருந்து ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் 100 ரூபாய் ஆகும்.

Image Source: freepik

செயல்முறை முடிந்ததும், ஆதார் அட்டையை டிராக் செய்ய உதவும் URN எண்ணைப் பெறுவீர்கள் -விரைவில் வீட்டிற்கே புதிய ஆதார் அட்டை வரும்

Image Source: freepik