மேலும் அறிய

ITI முடித்தவர்களா நீங்க? அல்லது நேரடியா ஃபேக்டரில வேலை கத்துக்கணுமா? இதோ உங்களுக்கான மாஸ் வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஜூலை 20-ல் நடக்கிறது - கலெக்டர் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொழிற்பழகுநராக (அப்ரண்டிஸ்) சேருவதற்கான மாவட்ட அளவிலான சிறப்பு சேர்க்கை முகாம் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டம்

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் தொழிற்பழகுநராக (அப்ரண்டிஸ்) சேருவதற்கான மாவட்ட அளவிலான சிறப்பு சேர்க்கை முகாம் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முகாம் நடைபெறும் இடம்:

இந்த முகாம் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முதல் தளத்தில் இயங்கி வரும் 'மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில்' அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்:

இம்முகாமில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC), தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB), பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை (HVF), ஐ.சி.எஃப் (ICF), என்.எல்.சி (NLC) மற்றும் பல்வேறு முன்னணி சிறு, குறு, நடுத்தர தனியார் தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொள்ள உத்தேசித்துள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேசிய சான்றிதழ் மற்றும் உதவித்தொகை:

முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்கள் என்சிவிடி (NCVT) மூலமாகவோ அல்லது நேரடியாக தொழிற்சாலைகளில் 'பிரெஷ்ஷர் அப்ரண்டிஸ்' ஆகவோ சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சி பெறலாம். அதன் பின்னர் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் 'தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்' (National Apprenticeship Certificate) வழங்கப்படும்.

இப்பயிற்சி காலத்தின் போது விவசாயி மற்றும் இதர குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக, நிறுவனங்கள் சார்பில் மாதாந்திர உதவித்தொகையாக (Stipend) ரூ.9,600 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் கீழே உள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

  • உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம்): 04146-294989
  • மண்டல பயிற்சி இணை இயக்குநர் (விழுப்புரம்): 04146-290673

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் 3,047 வேலைகள்! 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு!
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் 3,047 வேலைகள்! 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு!
டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 வேலைவாய்ப்புகள்! நவம்பர் 28 கடைசி நாள்!
டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 வேலைவாய்ப்புகள்! நவம்பர் 28 கடைசி நாள்!
12 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, ரயில்வேயில் 1,406 அரசு வேலைவாய்ப்புகள்!
12 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, ரயில்வேயில் 1,406 அரசு வேலைவாய்ப்புகள்!
சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் 12 காலிப்பணியிடங்கள்... 16-ம் தேதி கடைசி நாள்! அரசு வேலை தேடும் இளைஞர்களே முந்துங்கள்!
சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் 12 காலிப்பணியிடங்கள்... 16-ம் தேதி கடைசி நாள்! அரசு வேலை தேடும் இளைஞர்களே முந்துங்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.16 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.16 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
Car Tips: ஸ்டார்ட் செய்ததும் காரை டாப் ஸ்பீடிற்கு முறுக்கலாமா? பெட்ரோல், டீசல், CNG கார்களுக்கான டிப்ஸ்
ஸ்டார்ட் செய்ததும் காரை டாப் ஸ்பீடிற்கு முறுக்கலாமா? பெட்ரோல், டீசல், CNG கார்களுக்கான டிப்ஸ்
Embed widget