மேலும் அறிய

MGR Film Institute Admission: எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர விருப்பமா? கால அவகாசம் நீட்டிப்பு!

MGR Film Institute Admission: எம்‌.ஜி.ஆர்‌ திரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூன் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு எம்‌.ஜி.ஆர்‌ திரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்சி நிறுவனம்‌ கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின்‌ செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ கீழ்‌ செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம்‌ திரைப்படத் துறை மற்றும்‌ தொலைக்காட்சி துறையில்‌ மிகச்‌ சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும்‌, இயக்குநர்களையும்‌ உருவாக்கி வரும்‌ தனித்துவம்‌மிக்க நிறுவனமாகும்‌.  இந்தியாவிலேயே முதன்‌ முறையாக திரைப்படத் தொழில்நுட்பங்களுக்கு என 2016- 2017ஆம்‌ கல்வி ஆண்டு முதல்‌ தமிழ்நாடு டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா இசை மற்றும்‌ கவின்‌ கலை பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்‌ பெற்றது.

படிப்புகளின் விவரங்கள்

  • இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts (ஒளிப்பதிவு) (Cinematography)
  • இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts (எண்மிய இடைநிலை) (Digital Intermediate)
  • இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts (ஒலிப்பதிவு) (Audiography)
  • இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts (இயக்குதல்‌ மற்றும்‌ திரைக்கதை எழுதுதல்) (Direction and Screenplay writing)
  • இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts (படத்தொகுப்பு) (Film Editing)
  • இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts (உயிர்ப்பூட்டல்‌ மற்றும்‌ காட்சிப்பயன்‌) (Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம்‌ உள்ள அனைத்து மாணவ/ மாணவியரும்‌ மேற்குறிப்பிடப்பட்ட பாடப் பிரிவுகளில்‌ சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.

கால அவசாகம் நீட்டிப்பு

மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பப் படிவங்களை 20.05.2024-க்குள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யயும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.05.2-24க்குள் சமர்பிக்கவும் அறிவிக்கப்பட்டது. இப்போது கால அவசாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய - 05.06.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் - 10.06.2024

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கான விண்ணப்பங்களை 02.05.2024 முதல்‌ 20.05.2024 வரை www.tn.gov.in எனும்‌ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்.‌

உரிய தகவல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன்‌ அஞ்சல் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

முதல்வர்‌ 

தமிழ்நாடு அரசு எம்‌.ஜி.ஆர்‌. திரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்சி நிறுவனம்‌

சி.ஐ.டி. வளாகம்‌, தரமணி,

சென்னை - 600 113 

10.06..2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌கொள்ளப்பட மாட்டாது என்றும்‌, மாணவர்கள்‌ விண்ணப்பங்களைப் பெற நேரடியாக வர வேண்டாம்‌ என்றும்‌ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிப்புகள் குறித்து அறிய: https://cms.tn.gov.in/sites/default/files/whatsnew/prospectus_filminst.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
Breaking News LIVE:திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
Breaking News LIVE:திருவள்ளூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராட்டம்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget