Kanchipuram Jobs: காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம் 1000+ காலிப் பணியிடங்கள்! உங்களுக்கான வாய்ப்பு எப்போது?
Kanchipuram jobs: காஞ்சிபுரம் தனியார் வேலை வாய்ப்பு முகாம், வருகின்ற வெள்ளிக்கிழமை 24.10.2025 தேதி நடைபெற உள்ளது.

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தகவல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்கள்
தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
இதனை தொடர்ந்து, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 24.10.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள் என்ன ?
இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12-வது மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
எனவே, 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 24.10.2025 அன்று காலை 09.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.





















