300 காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு: எங்கு தெரியுங்களா?
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 300 பணியிடங்கள் இருக்குங்க. உடனே விண்ணப்பியுங்கள்.

தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தூத்துக்குடி மண்டலத்தில் 300 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்க.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப, தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு சம்பந்தபட்ட மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பட்டியல் எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
கல்வித் தகுதி: இளங்கலை அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: அதிகப்பட்ச வயது OC -32, MBC/ BC/ BCM/ MBC (V) – 34, SC/SCA/ST – 37
சம்பளம்: ரூ. 5,285 + 5,087
உதவுபவர் பணியிடம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : அதிகபட்ச வயது OC -32, MBC/ BC/ BCM/ MBC (V) – 34, SC/SCA/ST – 37
சம்பளம் : ரூ. 5,218 + 5,087
காவலர் பணியிடம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: அதிகப்பட்ச வயது OC -32, MBC/ BC/ BCM/ MBC (V) – 34, SC/SCA/ST – 37
சம்பளம்: ரூ. 5,218 + 5,087
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், C 42, 43 & 44, சிப்காட் காம்ப்ளக்ஸ், மீளவிட்டான், மடத்தூர் (அஞ்சல்), தூத்துக்குடி - 8
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025. இன்னும் சில நாட்களே இருக்குங்க. முந்திக் கொள்ளுங்க. மறந்திடாதீங்க தூத்துக்குடி மக்களே. உங்களுக்கான வேலைவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.



















