பத்தாம் வகுப்பு பாஸா? தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் வேலை ரெடி!
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் கல்வி, தொழில்நுட்பத்தில் வளர்ச்சிப் பெற வேண்டும் என்பதற்காகவும், இதுக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் செயல்பட்டுவருகிறது. இவ்வாணையத்தின் மூலம் அனைத்து வகை மாற்றுத்தினாளிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்குவது, சிறப்புக்கல்வி வழங்குவதல், மறுவாழ்வுப் பணிகளுக்கான நிபுணர்களை ஆயுத்தம் செய்தல் மற்றும் தயார்படுத்துதல், கல்வி மற்றும் சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பொருளாதா மேம்பாடு அடையச்செய்தல், சமூகத்தில் தடைகளற்ற சூழ்நிலையை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. குறிப்பாக தமிழகம் உள்ள அனைத்து மாற்றுத்தினாளிகளும் இவ்வாணையத்தின் கீழ் பலனடைந்துவருகின்றனர். இந்நிலையில் தமிழக மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்..
மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள்: 7
கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DTE முடித்திருக்க வேண்டும். காலணிகள் தயாரிப்பு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ST / SCA/ SC பிரிவினருக்கு 37 வயது வரையிலும், , MBC/ BCM /BC பிரிவினருக்கு 34 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் 10 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், http://www.scd.tn.gov.in/press_release/Skilled%20Assistant%20Grade இந்த பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
State Commissioner,
Commissionerate for the Welfare of Differently Abled,
Lady Willington College Campus, No.5,
Kamarajar Salai, Chennai-5
தேர்வு செய்யும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : ரூ.19,500 – 71,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை http://www.scd.tn.gov.in/press_release/Skilled%20Assistant%20Grade%20II%20notification.pdf என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.