Job Alert: அரசு வேலை வேண்டுமா?ரூ.62,000 வரை மாத ஊதியம் - முழு விவரம்!
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.
ஈரோடு மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- அலுவலக உதவியாளர்
- ஈப்பு ஓட்டுநர்
- இரவுக் காவலர்
- பதிவுரு எழுத்தர்
பணி இடம்
ஈரோடு, தளவாடி, சத்தியமங்கலம், பெருந்துறை, நம்புயூர், மொடைக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, பவானிசாகர், அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ள அலுவலகங்களில் காலியா உள்ள பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பட உள்ளன.
ஊதிய விவரம்
- அலுவலக உதவியாளர் - ரூ.15,900- ரூ.50,000/-
- ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500 - ரூ.62,000/-
- இரவுக் காவலர் - ரூ.15,900- ரூ.50,000-
- பதிவுரு எழுத்தர் - ரூ.15,900- ரூ.50,400/-
கல்வித் தகுதி
- இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க 20-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய https://erode.nic.in/notice_category/recruitment/page/2/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
ஈரோடு.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் விண்ணப்பிக்கும்போது அந்த முகவரியில் அஞ்சல் அனுப்ப வேண்டும். முகவரி குறித்த விவரங்களுக்கு https://erode.nic.in/notice_category/recruitment/page/2/- -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.12.2023 மாலை 5.45 மணிக்குள்..
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://erode.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரங்களை காணலாம்.
IDBI வங்கி வேலைவாய்ப்பு
பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 86 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பற்றி காணலாம்.
பணி விவரம்
- இணை பொது மேலாளர் (Deputy General Manager (DGM) - (Grade D))
- துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) )
- மேலாளர் ( Manager - (Grade B))
Audit-Information System (IS) , Fraud Risk Management, Risk Management, Corporate Credit/ Retail Banking (including Retail Credit), Infrastructure Management Department (IMD) - Premises, Security உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி:
- இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க பி.டெக், இளங்கலை பொறியியல், பி.சி.ஏ., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., முதுகலை ஐ.டி., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், Statistics, CA/MBA (Specialization in Banking/ Finance) /CFA/FRM/ICWA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- JAIIB/CAIIB/MBA என்ற படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு தேவையான கல்வித் தகுதிகள் குறித்து காண https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
வயது வரம்பு
இணை பொது மேலாளர் (Deputy General Manager (DGM) - (Grade D)) - 35- 45 வயது வரை
துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) ) - 28 - 40 வயது வரை
மேலாளர் ( Manager - (Grade B)) - 25 -35 வயது வரை
ஊதிய விவரம்
இணை பொது மேலாளர் (Deputy General Manager (DGM) - (Grade D)) - ரூ.76010/-
துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) ) - ரூ.63,840/-
மேலாளர் ( Manager - (Grade B)) - ரூ.48,170/-
ஓராண்டுகால probation முடிந்தபிறகு பணி நிரந்தரம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி இடம்:
இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள வங்கியின் அலுலகத்தில் நியமிக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf-என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
https://www.idbibank.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். - பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.
- “Recruitment of Specialist Officer – 2024-25” பக்கத்திற்கு செல்லவும்.
- “APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.12.2023
மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.