பவர்கிரிட்-ல் 1543 வேலைவாய்ப்பு! ரூ.1.20 லட்சம் சம்பளம்! நீங்க விண்ணப்பிக்கலாமா? உடனே தெரிஞ்சிக்கோங்க!
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு (POWERGRID Common FTE Written Test 2025) நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

மின் விநியோக நிறுவனத்தில் 1543 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க. ரூ1.20 லட்சம் வரை மாத சம்பளம். இந்த பணியிடங்களுக்கு யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரியுங்களா? பார்ப்போம் வாங்க.
மத்திய அரசின் மின் விநியோக நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 1,543 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இன்ஜினியரிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1,543 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு (POWERGRID Common FTE Written Test 2025) நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
கள பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) 532
கள பொறியாளர் (சிவில்) 198
கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல்) 535
கள மேற்பார்வையாளர் (சிவில்) 193
கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன்) 85
மொத்தம் 1,543
கள பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பதவிக்கு 17.09.2025 தேதியின்படி அதிகபடியாக 29 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் ஒபிசி 3 வருடம், எஸ்சி/எஸ்டி 5 வருடம், மாற்றுத்திறனாளிகள் 10 வருடம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தளர்வு பின்பற்றப்படுகிறது.
கள பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் அதனை சார்ந்த பாடப்பிரிவுகள் மற்றும் சிவில் மற்றும் சிவில் சார்ந்த பாடப்பிரிவுகளில் B.E/B.Tech/ B.Sc.(Engg) ஆகியவை முடித்திருக்க வேண்டும். மேலும் 1 வருடம் அனுபவம் அவசியமாகும். கள மேற்பார்வையாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் அல்லது அதனை சார்ந்த பாடப்பிரிவுகள், சிவில் மற்றும் சிவில் சார்ந்த பாடப்பிரிவுகள் மற்றும் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம் அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஆகியவற்றில் முழு நேர டிப்ளமோ பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
டிகிரி மற்றும் டிப்ளமோவில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களில் கள பொறியாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். கள மேற்பார்வையாளர் பதவிக்கு மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும். மாத அடிப்படை சம்பளத்துடன் கொடுப்பனைகள் மற்றும் அகவிலைப்படி சேர்ந்து வழங்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் பொது எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். எழுத்துத் தேர்வு தொழில்நுட்ப திறன், திறனறிவு, ஆங்கிலம், காரணம் கண்டறிதல், பொது விழிப்புணர்வு, நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் நபர்களின் மண்டல வாரியாக காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அடுத்தக்கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள். கள பொறியாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும்.
கள மேற்பார்வையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தப்பட்டு பணி வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் 24 மாதங்களுக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 5 வருடங்கள் வரை விரிவாக்கம் செய்யப்படும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கள மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு அளிக்கப்படுகிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 27-ம் தேதி தொடங்கி உள்ளது. வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பத்தை அனுப்பி விடுங்கள்.



















