Chennai Port Trust School: பி.எட். முடித்தவரா? வரும் 10-ம் தேதி நேர்காணல் - எங்கே? முழு விவரம்
Chennai Port Trust School: சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடத்திற்கு வரும் 10-ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்)
Post Graduate Teacher
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணபிக்க முதுகலை பட்டத்துடன் பி.எட். படித்திருக்க வேண்டும்.
அரசு / தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்) - ரூ.20,000/-
Post Graduate Teacher - ரூ.25,000/-
விண்ணப்பிபது எப்படி?
இதற்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. நேர்காணலுக்கு செல்பவர்கள் தேவையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள் - 10.10.2023
நேர்காணல் நடைபெறும் நேரம் - மதியம் 2 மணி முதல்.
காலை 10 மணி முதல் 11 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் முகவரி
New Conference Hall,
Ground Floor,
Centenary Building,
Chennai Port Authority
***
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பெண்கள் உண்டு உறைவிட பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
பணி விவரம்
ஆசிரியர் (தமிழ், கணிதம், அறிவியல்
பணியிடம்: வேலூர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க தமிழ், கணிதம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் இருந்தால் சிறப்பு. அதோடு, பி.எட். தேர்ச்சி பெற்று டெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
இதற்கு மாதந்திர தொகுப்பூதியமாக ரூ.22,000 வழங்கப்படும். சுழற்சி முறையில் விடுதியில் தங்கி பணியாற்ற வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த வேலைவாய்ப்பிற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க தகவல் அனுப்பப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா
குறிச்சி கிராமம் அஞ்சல் பவானி தாலுக்கா,
அம்மாபேட்டை ஒன்றியம்
ஈரோடு - 638 314 (9543034767 / 9095128808 )
Email ID - ragavan.g@hihseed.org
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா
குன்னன்புரம் கிராமம், கெட்டவாடி அஞ்சல்
தளவாடி தாலுக்கா,
தாளவாடி
ஈரோடி - 638461
9543034767 / 9025203343
மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu) தோட்டக்கலை துறையில் உள்ள ’Guest Faculty’ பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
Guest Faculty
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தோட்டக்கலை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெவிக்கப்பட்டுள்ளது.
மதிப்புத் தொகை
இந்தப் பணிக்கு க்ளாஸ் எடுக்கும் ஒரு பாடத்திற்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.50,000 மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் இந்தப் பணி தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க சுயவிவர குறிப்புடன் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
இமெயில் - hodhorti@cutn.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.10.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cutn.ac.in/wp-content/uploads/2023/09/Dept-of-Horticulture-Walk-in-Interview-Advertisement-for-Guest-Faculty_21092023.pdf - என்ற இணைப்பை பயன்படுத்தி காணலாம்.