Chennai Jobs: சென்னை அரசுப் பள்ளிகளில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
Chennai Jobs: சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை இங்கே காணலாம்.
![Chennai Jobs: சென்னை அரசுப் பள்ளிகளில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் Chennai Adi Dravidar and Tribal Welfare School TGT Teachers Check details and Apply Chennai Jobs: சென்னை அரசுப் பள்ளிகளில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/05/8accf90168d6a01612ac56b9830fc4451693902000680333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்
இடைநிலை ஆசிரியர் (தலைமை ஆசிரியர்)
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல்)
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல், இயற்பியல், வரலாறு, வேதியியல்)
மொத்த காலிப்பணியிடங்கள் -11
பணி இடம்:
அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி , விருகம்பாக்கம், சென்னை
அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, வளசரவாக்கம், சென்னை
அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, வடபெரும்பாக்கம், சென்னை (ஓராசிரியர் பள்ளி)
அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி. மதுரவாயல், திருமங்கலம், கன்னிகாபுரம்
கல்வித் தகுதி
இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுத்தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலாக பணிபுரிந்து வருபவர்கள்
இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை
வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். (TET)
பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள். அருகாமை மாவட்டத்தில் வசிப்பர்களும் இதற்கு விண்ணப்பிகலாம்.
ஊதிய விவரம்:
இடைநிலை ஆசிரியர் - ரூ.12,000/-
தலைமை ஆசிரியர் -ரூ.12,000/-
பட்டதாரி ஆசிரியர் - ரூ.15,000/-
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் - ரூ.18.000/-
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சுயகரத்தில் 2-ம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.09.2023 மாலை 5.45 மணிக்குள்
மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- ஜூனியர் அதிகாரி
- ஜூனியர் அலுவலர்
- மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்
- பயிற்சியாளர் (வேளாண்மை)
- பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்)
- பயிற்சியாளர் (க்வாலிட்டி கன்ட்ரோல்)
- பயிற்சியாளர் (ஸ்டெனோகிராஃபர்)
- பயிற்சியாளர் (வேளாண் ஸ்டோர்ஸ்)
மொத்த பணியிடங்கள்: 89
கல்வித் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி. வேளாண் படிப்பு, இளங்கலை பொறியியல், பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
ஜூனியர் அலுவலர் - ரூ.22,000 -77,000
மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் - ரூ.55,680
பயிற்சியாளர் - ரூ.23,664
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://www.indiaseeds.com/ - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.09.2023
வயது வரம்பு, தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்து கூடுதல் தகவலுக்கு https://www.indiaseeds.com/career/2023/NSC2023Rec/Rec202308.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)