Central Bank Of India Recruitment : செண்ட்ரல் பேங் ஆஃப் இந்தியாவில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!
செண்ட்ரல் பேங் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுத்துறை வங்கியான செண்ட்ரல் பேங் ஆஃப் இந்தியா (Central Bank of India) வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இப்பணிக்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
மேற்கண்ட பணிக்கு MSC (IT), BE (IT), MCA, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி இடம்:
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 வயது இருக்க வேண்டும். அதிகபட்சம் 28 வயது இருக்க வேண்டும்.
காலி பணியிடங்கள்: 5,000
விண்ணப்பிப்பது எப்படி?
Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:'
இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் தகுதி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
ஆன்லைன் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். ஆன்லைன் தேர்வு தொடர்பாக விவரங்கள் சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி காலம்:
இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. அதோடு, பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.04.2023 (இன்று)
விண்ணப்ப கட்டணம் :
பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், பொதுப்பணி துறையில் பணிபுரிபவர், மகளிர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதர பிரிவினர் ரூ.850 உடன் 18% சதவீத ஜி.எஸ்.டி. தொகையையும் சேர்த்து ஆன்லைனின் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in) என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.