Agnipath Recruitment: அக்னிபத் திட்டத்தில் ராணுவப் பணி! ஆண்கள் விண்ணப்பிக்கலாம் - விவரம் இதோ!
Agnipath Recruitment: அக்னிபத் திட்டத்தின் கீழ் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
Agnipath Recruitment: அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ பணிகளில் சேர மார்ச் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 ம் ஆண்டிற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கான தகுதித் தேர்வு (AGNIVEER GENERAL DUTY (MEN MILITARY POLICE)) நடைபெறவுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
- அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி (Agniveer General Duty)
- அக்னிவீர் டெக்னிக்கல் (Agniveer Technical)
- அக்னிவீர் அலுவலக உதவியாளர் (Agniveer Office Asst)
- அக்னிவீர் டிரெட்ஸ்மென் (Agniveer Tradesman)
கல்வித் தகுதி:
- அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 45% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். மேலும், ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
- அக்னிவீர் டெக்னிக்கல் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
- அக்னிவீர் அலுலவக உதவியார் பணியிடத்திற்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அக்னிவீர் டிரெட்ஸ்மென் பணியிடத்திற்கு 33 சதவீத மதிப்பெண்களுடன், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17 -1/2 முதல் 21 வயது வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 22-அன்றுடன் முடிவடைகிறது.
தேர்வு கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க ரூ.250 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் போர்ட்டல் மாற்றும் யூ.பி.ஐ. (UPI) மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும்.
ஹால்டிக்கெட்கள்:
ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் முதல் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in மற்றும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் மேலதிக தகவல் குறித்த அப்டேட்களை செக் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) ( 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இதற்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Computer Based Written Examination (Online CEE)) மற்றும் ஆட்சேர்ப்பு முகாம் (Recruitment Rally) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். உடற் தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவைகளுடன் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.03.2024
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் - 22.04.2024
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு - https://www.joinindianarmy.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.