மேலும் அறிய

500 பணியிடங்கள்:  உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை! எங்கே தெரியுங்களா?

விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியைச் சிறப்பாக எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, தமிழகப் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும்.

சென்னை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (National Insurance Company Limited - NICL), காலியாக உள்ள 500 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மற்றும் உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவர்களுக்கு இது ஒரு அருமையான வேலைவாய்ப்பாகும்.

முன்னணி பொதுத்துறை நிறுவனத்தில் பணி வாய்ப்பு

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நாட்டின் மிகவும் லாபகரமாக இயங்கும் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் சேர விரும்பும் தேர்வர்களுக்கு இந்த 500 காலியிடங்கள் அறிவிப்பு பெரும் நற்செய்தியாக அமைந்துள்ளது.

மாநில வாரியாகக் காலியிடங்களின் விவரங்கள்

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாடு: 49 பணியிடங்கள்

புதுச்சேரி: 02 பணியிடங்கள்

மகாராஷ்டிரா: 57 பணியிடங்கள்

மேற்கு வங்கம்: 46 பணியிடங்கள்

ராஜஸ்தான்: 36 பணியிடங்கள்

கேரளா: 35 பணியிடங்கள்

குஜராத்: 34 பணியிடங்கள்

கர்நாடகா: 30 பணியிடங்கள்

உத்தரப் பிரதேசம்: 24 பணியிடங்கள்

டெல்லி: 20 பணியிடங்கள்

அசாம் / சத்தீஸ்கர் / மத்தியப் பிரதேசம்: தலா 18 பணியிடங்கள்

ஒடிசா: 16 பணியிடங்கள்

தெலுங்கானா: 15 பணியிடங்கள்

ஆந்திரப் பிரதேசம்: 14 பணியிடங்கள்

பீகார்: 12 பணியிடங்கள்

ஜார்க்கண்ட் / பஞ்சாப்: தலா 10 பணியிடங்கள்

உத்தராகண்ட்: 08 பணியிடங்கள்

அருணாச்சலப் பிரதேசம்: 05 பணியிடங்கள்

சண்டிகர் / ஜம்மு & காஷ்மீர்: தலா 04 பணியிடங்கள்

ஹரியானா: 03 பணியிடங்கள்

கோவா / இமாச்சலப் பிரதேசம் / மேகாலயா / மிசோரம் / திரிபுரா: தலா 02 பணியிடங்கள்

நாகாலாந்து / சிக்கிம்: தலா 01 பணியிடம்

கல்வித் தகுதி மற்றும் உள்ளூர் மொழி அறிவு

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (Degree) முடித்திருக்க வேண்டும்.

மொழித் தகுதி: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியைச் சிறப்பாக எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, தமிழகப் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் தளர்வுகள்

வயது வரம்பு: 01.07.2026 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (அதாவது 02.07.1996-க்கு முன்பாகவோ அல்லது 01.07.2005-க்கு பிறகோ பிறந்திருக்கக் கூடாது).

வயதுத் தளர்வு:

SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள் தளர்வு உண்டு (35 வயது வரை விண்ணப்பிக்கலாம்).

OBC பிரிவினர்: 3 ஆண்டுகள் தளர்வு உண்டு (33 வயது வரை விண்ணப்பிக்கலாம்).

ஊதிய விவரம்

இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உதவியாளர்களுக்கு மாதம் ரூ.63,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை

ஆன்லைன் முதல் கட்ட எழுத்துத் தேர்வு (Phase-1 Online Exam)

ஆன்லைன் இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு (Phase-2 Online Exam)

நேர்முகத் தேர்வு (Interview)

விண்ணப்பக் கட்டணம் & முக்கிய தேதிகள்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850/- (ஆன்லைனில் செலுத்த வேண்டும்). SC / ST பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நாள்: 18.07.2026

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2026

முதல் கட்டத் தேர்வு நாள் (தோராயமாக): 27.08.2026

இரண்டாம் கட்டத் தேர்வு நாள் (தோராயமாக): 30.10.2026

தகுதியுள்ள தேர்வர்கள் காலக்கெடு முடிவதற்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget