தூக்கம் மற்றும் மனச்சோர்வு மருந்துகளால் யாருக்கு அதிக ஆபத்து? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
தூக்க மற்றும் மனச்சோர்வு மருந்துகள் அதீத தூக்கக் கலக்கம், தலைச்சுற்றல் அல்லது நடப்பதில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவர்கள் நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தூக்கப் பிரச்சனைகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துவது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்ட நிலையில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பார்க்கலாம்.
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் மக்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சர்வ சாதாரணமாக பாதிக்கப்படுகின்றனர். நமக்கு வயதாகும்போது இயல்பாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்பது வேறு. ஆனால் மன அழுத்தம், சமூக பிரச்னைகள், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்னையால் அவதிப்படுபசர்களில் சிலருக்கு மருத்துவர்கள் தூக்கம் மற்றும் மனச்சோர்வுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர்.
இவை மனச்சோர்வை குறைத்து சிறந்த தூக்கத்தை அளித்தாலும், இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தானது. அதேசமயம் பரிந்துரைத்தபடி பயன்படுத்தினாலும் அதன் விளைவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதையும் உறுதி செய்ய முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தூக்க மற்றும் மனச்சோர்வு மருந்துகள் அதீத தூக்கக் கலக்கம், தலைச்சுற்றல் அல்லது நடப்பதில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவர்கள் நடத்திய ஓர் ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வயதானவர்களுக்கு இதன் ஆபத்து அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தூக்க மாத்திரைகள் உங்கள் மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் நீங்கள் தூங்க உதவுகின்றது. ஆனால் அவற்றின் பக்க விளைவுகள் நீங்கள் மறுநாள் தூங்கி எழுந்தாலும் நீடிக்கும். நடக்கும்போது சமநிலையை இழக்கலாம். மாத்திரை எடுத்தபின் நடு இரவில் கழிவறை செல்லும்போது இதுபோன்ற ஆபத்தை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.நம்முடைய வயதைப் பொறுத்து இந்த மருத்தின் விளைவுகள் இருக்கக்கூடும் என சொல்லப்பட்டுள்ளது. காரணம் உடல் இந்த மருந்தை மெதுவாக உறிஞ்சுகிறது. எனவே தான் நீண்ட நேரமானாலும் அதன் தாக்கம் நம்மிடையே இருக்கும். அதாவது உடல் வலி, தூக்க சோர்வு போன்றவை இருக்கும்.
வயதானவர்கள் தூக்கம் அல்லது மனச்சோர்வுக்காக மருந்துகளை உட்கொண்டால் அவர்கள் சுயமாக அதை நிறுத்திவிடக் கூடாது. மருந்தின் அளவை அதிகரிப்பது அல்லது குறைப்பது போன்ற முடிவுகளை மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும். மருந்துகளை உட்கொண்ட பிறகு, வயதானவர்களுக்கு தலைச்சுற்றல், அதீத தூக்கக் கலக்கம் அல்லது நடப்பதில் சிரமம் ஏற்படாமல் இருப்பதை குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். அதேசமயம் தூக்கமின்மை, மனச்சோர்வு தொடர்பான மருந்துகளை உட்கொண்டால் இரவில் வீட்டில் தனிமையில் உறங்க வேண்டாம். ஏதேனும் ஒரு அவசரம் என்றால் உதவிக்கு ஆட்கள் தேவை என்பதை மறக்காதீர்கள். அதேசமயம் எந்தவிதமான மருந்தையும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எடுக்க வேண்டாம். மருந்துச்சீட்டு இல்லாமல் திருட்டுத்தனமாக இதுபோன்ற மருந்துகளை நீங்கள் பெறுவது சட்டவிரோத செயல் என்பதையும் மறவாதீர்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ட்ரெண்டிங் செய்திகள்





















