(Source: ECI/ABP News/ABP Majha)
சும்மா தெரிஞ்சுக்கோங்க: எப்போதும் ‛ஹெட்போன்’ அணிந்திருப்பவரா? அப்போ நீங்க தான் கட்டாயம் படிக்கணும்!
அடிப்படையில் காது ஒருவகை கழிவை வெளியேற்றும் பகுதி. நீங்கள் தொடர்ந்து காதில் ஹெட்போன் மாட்டியிருந்தால், கழிவு வெளியேறாமல் தேங்கிவிடும்.
அறிவியல் சாதனங்கள்... நம் வசதிக்கானவை. ஆனால், அவற்றை நம் அன்றாடத்தில் கட்டாயம் ஆக்கும் போது தான் பிரச்சனைகள் வருகிறது. தொலைதொடர்புக்கு தரப்பட்ட மொபைல் போன், பொழுதுபோக்கு பொருளானதும், வேலையை எளிதாக்க கண்டுபிடிக்கப்பட்ட லேப்டாப், ஆன்லைன் விளையாட பயன்படுத்தப்படுவதும் இதற்கு உதாரணம்.
இப்படி தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும், நாம் திசை மாற்றிக் கொண்டிருக்கிறோம். சரி... அதனால் பயன் என்கிற வரை பிரச்சனை இல்லை. ஆபத்து என்றால்? ஆமாம் ஆபத்து தான்... மொபைல் போனை தொலைதொடர்பு பயன்படுத்தும் வரை பிரச்சனை இருக்காது; அதை பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் போது, அதை அதிகம் நேரம் பார்ப்பதால் ஏற்படும் பார்வை குறைபாடுகள், அதே போல தான் லேப்டாப்பும். இதே போல தான், ஹெட்போன் பயன்பாடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். ஆனால், இங்கே அளவை மீறி உபயோகிக்கும் பொருட்களில் ஹெட்போனும் ஒன்று.
சிலர் சட்டை போடும் போது பனியன் அணிவதைப் போன்று, ஹெட்போன் மாட்டிக்கொள்வதை வழக்கமாக்கிவிட்டனர். பலர் அதை ஸ்டைலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தான் இதில் வருந்தக்கூடிய ஒன்று. பேச்சை தெளிவாகவும், தனியாகவும் கேட்க கண்டுபிடிக்கப்பட்ட ஹெட்போன், இன்று கர்ணன் கவச குண்டலத்தோடு இருப்பதைப் போல, பலர் காதுகளில் ஒட்டிக்கொண்டே இருக்கிறது.
இதனால் பாதிப்பு இருக்கிறதா என்றால், இருக்கிறது என்கிறது மருத்துவ உலகம். அடிப்படையில் காது ஒருவகை கழிவை வெளியேற்றும் பகுதி. நீங்கள் தொடர்ந்து காதில் ஹெட்போன் மாட்டியிருந்தால், கழிவு வெளியேறாமல் தேங்கிவிடும். அது அரிப்பு மாதிரியான தொல்லைகளை உங்களுக்கு தரும். பலர் அதை அனுபவித்தும் வருவீர்கள். ஹெட்போன் அதிகம் உபயோகிப்பவருக்கு இயல்பாகவே அதிக சத்தத்தை மட்டுமே கேட்கும் திறன் ஏற்படலாம்.
இதனால், சாதாரண சத்தத்தை கூட கூடுதல் சவுண்ட் வைத்து கேட்கத் தோன்றும். இது செவி மடலை கடுமையாக பாதிக்கும். அது காது வலியை அடிக்கடி தரும். இதனால் வயதானவர்கள் பயன்படுத்தும் செவித்திறன் அதிகரிக்கும் இயந்திரத்தை சிறுவயதில் வாங்கி அணியம் சூழல் ஏற்படும். தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவது மூளையை பாதிக்கிறது. குறிப்பாக உங்களின் கற்பனை திறனை அது கடைசியாக சீர்குலைக்கும். ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘ என்கிற நோயை ஹெட்போன் பயன்பாட்டாளர்கள் சந்திப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தவிர அது ஒரு மின்சாதன பொருள். மொபைலில் இருந்து மின்சாரத்தை கடத்தும். அது ஏற்படுத்தும் பாதிப்புகளும் மிச்சம் இருக்கின்றன.
அதற்காக ஹெட்போன் பயன்படுத்தக்கூடாதா என்றால்... பயன்படுத்துவது தவறில்லை... பயன்படுத்திக் கொண்டே இருப்பது தான் தவறு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )