மேலும் அறிய

செங்கல்பட்டு : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 328 ! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக பதிவு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்கு பிறகு 500-க்கு கீழ் குறைந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 328 -ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை கடந்த இரண்டு  மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வந்தது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். ஊரடங்கு மற்றும் அதிக பரிசோதனை எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை செங்கல்பட்டு மாவட்டம் தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்துவந்தது. இந்நிலையில் ஊரடங்கு எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.  இரண்டு வாரங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500-ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது கணிசமாக குறைந்தது நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 328 , கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 4, குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 253. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 1815 .

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு குணமடைந்து வீடு திரும்புபவர்களின் தற்போது படுக்கைகள் காலியாக உள்ளன. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 154118-ஆக பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் தொடர் கண்காணிப்பு மற்றும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தி நடவடிக்கைகளால் தற்போது வைரஸ் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது.

தற்போது மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும். மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 50 சதவிகித இருக்கைகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு அவசியமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் தங்களுடைய நலன் மற்றும் அனைவரின் நலன் கருதி முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு கூறும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றவேண்டும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Tata Nexon: பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
Selvaperunthagai : காங்கிரஸ் மாஜி தலைவரை தட்டி தூக்கும் திமுக.? ராகுலுக்கு ஷாக் கொடுக்க ரெடியாகும் ஸ்டாலின்.?
காங்கிரஸ் மாஜி தலைவரை தட்டி தூக்கும் திமுக.? ராகுலுக்கு ஷாக் கொடுக்க ரெடியாகும் ஸ்டாலின்.?
Embed widget