மேலும் அறிய

India Corona Spike: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,000 -ஐ கடந்தது.. மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரம்..

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,199 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,199 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகள் காரணமாக பெருந்தொற்று ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களில் அதிகபட்ச பாதிப்பு ஏப்ரல் 8ஆம் தேதி பதிவானது. சனிக்கிழமையன்று தினசரி தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது. நேற்றைய நிலவரப்படி தினசரி தொற்று பாதிப்பு 5,357 ஆக இருந்தது. ஏப்ரல் 8ஆம் தேதியை ஒப்பிடும்போது இது சற்று குறைவாகும். கடந்த 24 மணி நேரத்தில் 5,880 பேருக்கு புதிதாக கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 35,199 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 85,076 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புவர்களில் சதவீதம் 98.73 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு சதவீதம் 3.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பும் 3.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 12,433 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவில் 4587 பேரும், டெல்லியில் 2460 பேரும், குஜராத்தில் 2013 பேரும், தமிழ்நாட்டில் 1900 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவி வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பருவக்கால காய்ச்சலும் பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கொரோனா ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு இருக்கும் கேரளாவில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தேசிய தலைநகரான டெல்லியில் மருத்துவமனைகள், பாலிகிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget