மேலும் அறிய

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் பல பல நன்மைகள்!

எந்த எண்ணெயை தொப்புளில் விட்டு, மசாஜ் செய்தால் என்ன பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே நம் உடல் சூடாகி விட்டது என்றால் நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது. 

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இந்த தொப்புள் பகுதியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, தொப்புளை சுற்றி ஒரு அங்குலம் வரை வட்ட வடிவில், மசாஜ் செய்வதன் மூலம் பல பிரச்சினைகள் தீருவதாக மருத்துவ குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. எந்த எண்ணெயை தொப்புளில் விட்டு, மசாஜ் செய்தால் என்ன பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் பல பல நன்மைகள்!

தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும், கம்ப்யூட்டர், மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைப்பாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது. உடல் சூட்டினால் உண்டாகும் பித்தவெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலைமுடி ஆரோக்கியமாக செழித்து வளரும். முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது கால் குடைச்சல் சதா சர்வகாலம் சிலருக்கு இருக்கும் இதற்கு காரணம் நரம்பு பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது. உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். நம் தொப்புளில் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால், நாம் விடும் எண்ணெய் தொப்புளில் உள்ள நரம்புகள் வழியாக சென்று அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான இரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இத்தனை பிரச்சனைகள் குணமாகுமா? என்ற ஆச்சர்யம் நம்மில் பல பேருக்கு இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதுதான் இந்த வைத்தியம். உடல் சூடு, கண் வறட்சி, மூட்டுவலி, சோம்பல், முழங்கால் வலி, சரும வறட்சி, தலைமுடி உதிர்தல், பாத வெடிப்பு, போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இந்த வைத்தியத்தை எந்த எண்ணெயில் செய்வது? எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வகையான பிரச்சனைக்கும், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக, தொப்புளில், அந்த குறிப்பிட்ட எண்ணையை 1/2 ஸ்பூன் அளவு விட்டு, வலப்புறமாகவும் இடப் புறமாகவும், வட்டவடிவில் லேசான முறையில் மசாஜ் செய்து வரவும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் பல பல நன்மைகள்!

நல்லெண்ணெய்:

உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும் குறைந்துவிடும்.

கடுகு எண்ணெய்:

கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும். உடல் நடுக்கம் குறையும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

வேப்ப எண்ணெய்:

சரும பிரச்சனையான முகப்பரு, தேமல், சொறி, படை போன்ற பிரச்சனைக்கு வேப்ப எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்து வரவேண்டும். கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகளால் தோலில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் இந்த வேப்பெண்ணை சரிசெய்துவிடும்.

நெய்:

நெய்யை தொப்புளில் விட்டு தடவி வர முகத்தின் அழகு கூடும். உடல் வறட்சி தன்மை நீங்கும்.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்:

இந்த இரண்டு எண்ணையின் ஏதாவது ஒன்றை தொப்புளில் விட்டு தேய்த்துவர ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். குழந்தை இல்லாமல் தவித்து வரும் பெண்களுக்கு இது ஒரு நல்ல வைத்தியமாக இருக்கும். கூடிய விரைவிலேயே நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். குறிப்பாக கருச்சிதைவு இருக்கும் பெண்கள் தினம்தோறும் ஆலிவ் எண்ணையை தொப்புளை சுற்றி தடவிக்கொண்டு படுப்பது மிகவும் நல்லது. இதுதவிர, ஆலிவ் ஆயிலை தொப்புளில் தொடர்ந்து தேய்த்து வர, முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளக்கெண்ணெய்:  

இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் மூணு சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்னரை இன்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகின்றன. உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்துமே வலிமை பெறும்.

எலுமிச்சை எண்ணெய்:

எலுமிச்சை எண்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்றுவலி குணமாகும். தோற்ற அழிந்துவிடும்.

பாதாம் எண்ணெய்:

தினமும் இரவில் பாதாம் எண்ணெய்யை தொப்புளில் வைத்து  மசாஜ் செய்தால் 10 நாட்களில் முகம் மற்றும் சருமம் பளபளக்கும். முகம் இளமையாக மாறும்,  முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget